முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட திருத்தம் தொடர்பில் ஒன்றுசேர்ந்த MPக்கள்

Ceylon Muslim
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தீர்மானமெடுக்கும் முக்கிய கலந்துரையாடல் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகொரல தலைமையில் நேற்று வியாழக்கிழமை (07) பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது. 

ஷரீஆ சட்டத்துக்கு முரணாகாத வகையில், முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டது. 

அதேவேளை, நாடு முழுவதிலும் காணப்படும் காதி நீதிமன்றங்களை ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டுவந்து, திருமணம் சம்பந்தமான பிரச்சினைகளை இலகுவாக கையாள்வதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டன. 

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு சார்பில் நீதியரசர் சலீம் மர்சூப் தயாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன. 

இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர் றிஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர்களான செய்யித் அலிஸாஹிர் மௌலானா, எச்.எம்.எம். ஹரீஸ், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தி, உலமாக்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
6/grid1/Political
To Top