Top News

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் SLMCயின் ஆதிக்கம் -மாற்றுக்கட்சி புறக்கணிப்பு

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஆட்சி அமைத்துள்ள ஸ்ரீ.மு.கா சார்ந்தவர்களைத்தவிர ஏனையகட்சிகளினது மக்கள் பிரதிநிதிகளின் வேண்டுகோள்கள் எதனையும் சபை தவிசாளரும் சரி சபை ஊழியர்களும் சரி யாருமே கண்டு கொள்வதில்லை என்பது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஸிராஜ் தனது அறிக்கையில் தெரிவித்தார் .

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; 

பாலமுனை இரண்டாம் பிரிவுக்கு புதிய வாசிகசாலை நிறுவுதல் சம்ந்தமாக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எச்.எம்.சிறாஜ் அவர்கள் அந்த பிரதேசத்தை பிரிநிதித்துவப்படுத்துபவர் என்பதனால் பாலமுனை 02 கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்தனர்.

அத்த வேண்டுகோளுக்கிணங்க பிரதேச சபை உறுப்பினர் சிறாஜ் அவர்கள் பல வழிகளிலும் முயற்சித்து கை கூடாத நிலையில்.கிராம அபிவிருத்திச் சங்கத்திடம் சபையின் கட்சி சார்பான செயற்பாடுகளால் இந்த விடயம் கைநழுவிடும் எனேவ அவர்களது பெயர் வைக்கப்பட்டாலும் பரவாயில்லை எமது பிரதேசத்துக்கான வாசிகசலையை கட்டாயம் நிறுவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்..

அல்ஹிதாயா வட்டடார உறுப்பினர் SMM.ஹனிபா அதிபர் அவர்களை தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொண்டு இவ்விடயம் சம்மந்தமாக பேசியதோடு அவரூடாக பாலமுனை 02 கிராம அபிவிருத்திச் சங்கத்தினரும் அவரை தொடர்பு கொண்டு அவரூடாக அந்த வேண்டுகோளும் நிறேவேற்றப்பட்டது.

இது தொடர்பாக... அமைப்பெற்ற வாசிகசாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே உறுப்பினர் சிறாஜ் அவர்கள் மேற்சொன்ன விடயங்களை மிகவும் மனவருத்தத்துடன் பேசியிருந்தார்.

அவர் மேலும் எமது ஊடகப்பிரிவுக்கு கருத்து தெரிவிக்கையில்....

மேற்சொன்ன விடயங்கள் மாத்திரமல்லாமல் தெருவிளக்கு பொருத்துதல் மற்றும் பராமரித்தல், திண்மக்கழிவகற்றல், விளையாட்டு மைதான பராமரிப்பு முதலிய பல விடயங்களிலும் தவிசாளர் உள்ளிட்ட அனைவரும் கட்சி சார்பு மற்றும் பிரதேச பாகுபாடு காரணமாக பாராபட்சமாக இருப்பது கவலையளிக்கிறது.

மேலும் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமாக அமைப்பெற்றுள்ள பார்த்திருப்போர் அரங்கின் மின் விளக்குகள் ஒளிராது காணப்படுவதாகவும் அதில் நிகழ்வுகளை நடத்துபவர்கள் பல சிரமங்களை எதிர் கொள்வதால் அதனை உடனடியாக நிவர்த்தி செய்யும் படி சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் அவர்கள் உறுப்பினராக இருந்த வேளை சபையின் முதல் அவர்வில் பிரேரனை முன்வைத்து நிறைவேற்றப்பட்டு வருடங்கள் கழிந்தும் இன்னும் நிவர்த்தி செய்யப்படவில்லை.

அதுமட்டுமல்ல விளையாட்டுமைதானத்தில் அமைந்துள்ள குடிநீரிணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது அதுவும் இதுவரை சரி செய்யப்படவில்லை. விளையாட்டு மைதான பராமரிப்பாளர் அல்லது காவலாளி இதுவரை நியமிக்கப்படவில்லை இவைகள் தொடர்பாக சபையில் பலமுறை தீர்மாணங்கள் நிறைவேற்றியும் இன்னும் கண்டுகொள்வதாக இல்லை...

பாலமுனை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பல நிகழ்வுகளில் கலந்து கொண்ட தவிசாளர் இவற்றையெல்லாம் நிவர்த்தி செய்து தருவதாக பல வாக்குறுதிகள் வழங்கியும் இதுவரை எதுவும் நடந்த பாடில்லை

சட்டத்தரணி அன்சில் அவர்கள் தவிசாளராக இருந்த காலப்பகுதியில் இவ்வாறான கட்சி, பிரதேச பாகுபாடுகள் பாராது அனைவரையும் ஒருமித்து அரவனைத்து செயற்பட்டதனால் சபையை சிறப்பாக வழிநடாத்த முடிந்தது.. எனேவ இனிவரும் காலங்களிலாவது கட்சி மற்றும் பிரதேச பாகுபாடுகளை விடுத்து மாற்று கட்சியினரும் மக்கள் பிரதிநிதிகள் அவர்களை சார்ந்துள்ள மக்களும் நமது சபையினூடாக சகல விடயங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற மனோநிலையில் செயற்படுமாறும் பிரசேச சபை உறுப்பினர் கௌரவ எச்.எம்.சிறாஜ் அவர்கள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரை வேண்டிக் கொள்கின்றார்.
Previous Post Next Post