நாலக டி சில்வா மாதம் 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்

NEWS


முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 26 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி அவர் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகிய இருந்தார். தொடர்ந்து 5 நாட்கள் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னரே அவர் கைது செய்யப்பட்டிருந்தார். 

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
6/grid1/Political
To Top