700 கோடி ரூபாய் பெறுமதியான வைரம் மற்றும் இரத்தினக்கற்கள் கொள்ளை; மேலும் இருவர் கைது

NEWS


சுமார் 700 கோடி ரூபாய் பெறுமதியான வைரம் மற்றும் இரத்தினக்கற்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்வத்துக்கு உதவி ஒத்தாசை வழங்கிய சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் பிலியந்தல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

28 வயதுடைய இரண்டு பேர் இன்றைய தினம் இவ்வாறு பேலியகொடை விசேட விசாரணை பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 05ம் திகதி இடம்பெற்றதாக கூறப்பட்டும் இந்தக் கொள்ளை தொடர்பில் பேலியகொடை விசேட விசாரணை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இருவரில் ஒருவரின் சித்தப்பா, டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாக்கந்துரே மதூஷுக்கு நெருக்கமானவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
6/grid1/Political
To Top