இ/அல்-மக்கியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 9A,8A,B சித்திகள்

NEWS
0 minute read
இ/அல்-மக்கியா முஸ்லிம் மகா வித்யாலய மாணவிகளான எச்.ஐ.எப் அப்ஸா 9A சித்தியும், ஏ.ஏ.எஸ் சமீஹா 8A சித்தியும் பெற்றுள்ளனர். இவர்கள் பாடசாலைக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர் அல்ஹம்துலில்லாஹ்.

இவர்கள் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையிலும் தோற்றி பாடசாலையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், இவர்கள் எதிர்காலத்தில் மிகச் சிறந்த இலக்கை அடைய வேண்டுமென பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் பிரார்த்திக்கின்றனர்.

அதேபோன்று இரத்தினபுரியில் தமிழ் மொழிமூல பாடசாலைகளில் போதிய வளங்கள் இன்மையினால் தமிழ் மொழிமூல கல்வி பின் தங்கிய நிலையில் காணப்படுகின்றது. ஆனால் இரத்தினபுரி அல் மக்கியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் அல்லாஹ்வின் உதவியாலும் அதிபர் , ஆசிரியர்கள், மாணவர்களின் முயற்சியினாலும் ஒவ்வொருவரிடமும் சிறந்த பெறுபேறுகள் எமக்கு கிடைகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

அல் மக்கியா முஸ்லிம் மகா வித்தியாலயம் அகில இலங்கைரீதியில் முதல் இடத்தைப்பெற பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் - எம்.எம்.எம் நுஸ்ஸாக்
இரத்தினபுரி
6/grid1/Political
To Top