ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தை வெற்றி

NEWS
0 minute read
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இச்சந்திப்பு இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து பரந்தளவிலான கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பாகவே இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர் தீர்மானிக்கப்படுவார் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
6/grid1/Political
To Top