Top News

வில்பத்துவில் எந்த அழிப்பும் இல்லை - களத்திற்கு சென்ற இராஜாங்க அமைச்சர் அஜித் மன்ன­பெ­ரும

வில்­பத்து வன­ பா­து­காப்பு பகு­தியில் நில ஆக்கிரமிப்பு நட­வ­டிக்­கைகள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை. வன பாது­காப்பு அதி­கா­ர ­ச­பை­யினால் வில்­பத்து வன ­பா­து­காப்பு பிரிவு மீள் குடி­யேற்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு விடுவிக்­கப்­ப­டவும் இல்லை. இந்த வன ­பா­து­காப்பு நில அப­க­ரிப்பு இடம்­பெ­று­வ­தாக குறிப்­பிடு­வது போலி குற்றச்சாட்டுக்கள் என்றும் குறித்த வில்­பத்து வன­பா­து­காப்பு பகுதி வன­ பா­து­காப்பு அதி­கார சபையின் கட்­டுப்­பாட்டில் உள்ள­தாக சுற்றாடல் துறை இராஜாங்க அமைச்சர் அஜித் மன்ன­பெ­ரும தெரிவித்தார். மேலும் வில்­பத்து வனப்­ப­கு­திக்கு அப்­பா­லுள்ள மன்னார் பிர­தே­சத்தின் மறிச்­சிக்­கட்டி, கரண்­டியன் குளம் மற்றும் விளத்தி குளம் ஆகிய வன பிர­தே­சங்­களின் சில பகு­தி­களே இவ்­வாறு மீள் குடி­யேற்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

வில்­பத்து வன­பா­து­காப்பு பகு­தியில் ஆக்­கி­ர­மிப்­புகள் இடம்­பெ­று­வ­தாக பர­வ­லாக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் குறிப்­பிட்ட பிர­தே­சங்­க­ளுக்கு திடீர் விஜயம் மேற்­கொண்டு நிலை­மை­களை அவர் அவ­தா­னித்தார். அத்­துடன் நிலவும் பிரச்­சினை தொடர்பில் தெளி­வுப­டுத்தும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று சுற்­றூ­டற்­றுறை அமைச்சில் இடம்­பெற்­றது. இதன்­போது அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

வில்­பத்து வன­பா­து­காப்பு பகு­தியில் நில ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கைகள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை. அனு­ரா­த­புரம் மற்றும் புத்­தளம் மாவட்­டத்­தி­லேயே வில்­பத்து வன­பா­து­காப்பு பகுதி அமைந்­துள்­ளது. அங்கு நில அப­க­ரிப்பு சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வ­தற்­கான வாய்ப்பும் இல்லை. குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­வது போன்று எவ்­வித பிரச்­சி­னை­களும் அங்கு இடம்­பெ­ற­வில்லை என்றே குறிப்­பிட வேண்டும்.

ஆனால், குறித்த வில்­பத்து வன­பா­து­காப்பு பகு­திக்கு அப்­பாற்­பட்ட வனப்­ப­குதி ஒன்றில் நில அப­க­ரிப்பு தொடர்­பான பிரச்­சினை காணப்­ப­டு­கின்­றது. அதா­வது மன்னார் பிர­தே­சத்தின் மறிச்­சி­கட்டி, கரண்­டியன் குளம் மற்றும் விளத்­தி­குளம் ஆகிய வன பிர­தே­சங்­க­ளி­லேயே இது­போன்று மீள் குடி­யேற்ற நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறை­வுக்கு வந்­ததன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மக்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிப்­ப­தற்­காக கடந்த அர­சாங்கம் முன்­னெ­டுத்த வேலைத்­திட்­டங்­களின் கார­ண­மா­கவே இந்த வனப்­ப­கு­தி­களில் இவ்­வா­றான நில அப­க­ரிப்­புகள் இடம்­பெற்று வரு­கின்­றன. யுத்தம் நிறை­வ­டைந்­ததன் பின்னர் மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்கம் வடக்கு கிழக்கு மக்­களின் வாழ்க்­கையை சீர­மைக்கும் நோக்கில் கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை நிய­மித்­தி­ருந்­தது.

இந்த ஆணைக்­கு­ழு­வி­னூ­டாக வடக்கு, கிழக்கில் இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்கு காணி­களை பெற்­றுக்­கொ­டுக்கும் கொடுப்­ப­தற்­காக கடந்த அர­சாங்­கத்தின் ஜனா­தி­பதி வடக்கு கிழக்கின் மீள் குடி­யேற்றம், அபி­வி­ருத்தி மற்றும் பாது­காப்பின் நிமித்தம் விசேட குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்தக் குழுவில் முக்­கிய அமைச்­சுக்­களின் செய­லா­ளர்கள் மற்றும் இரா­ணு­வத்­தினர் ஆகியோர் உள்­ள­டங்­க­லாக 19 .பேர் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தனர். இத­னூ­டாக அந்த மக்­களின் மீள் குடி­யேற்­றத்­துக்­கான நிலப்­ப­கு­தியை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான பரி­சீ­ல­னை­களும் இடம்­பெற்­றுள்­ளன.

அந்த ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­க­ளுக்கு அமை­வாக 2012 ஆம் ஆண்டு வன பாது­காப்பு திணைக்­களம், வன­ஜீ­வ­ரா­சிகள் பாது­காப்பு திணைக்­களம் உள்­ளிட்ட பல்­வேறு திணைக்­க­ளங்­க­ளிடம் , 22 ஆயி­ரத்து 586 குடும்­பங்­களை மீள குடி­யேற்­றுப்­ப­ட­வுள்­ள­தா­கவும், இவற்றுள் 15 ஆயி­ரத்து 189 குடும்­பங்­களே மீள் குடி­யேற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் ஏனைய குடும்­பங்­களை மீள் குடி­யேற்­று­வ­தற்குத் தேவை­யான காணி­களை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. இந்த வேண்­டுக்­கோ­ளுக்கு இணங்­கவே இந்த வனப்­ப­குதி குடி­யேற்­றங்­க­ளுக்­காக பொறுப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் இந்தப் பரிந்­து­ரை­க­ளுக்கு அமை­வாக இது தொடர்பில் வன­பா­து­காப்பு திணைக்­க­ளத்­துக்கு அறி­விக்­காமல் குறித்த வனப்­ப­கு­திகள் மீள்­கு­டி­யேற்­றத்­துக்­காக விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. அதே­போன்று மறிச்­சிக்­கட்டி, காண்­டியன் குளம் மற்றும் விளத்தி குளம் ஆகி­ய­ன­வற்றின் நிலப்­ப­ரப்­புக்கள் அன்று இருந்த நிலத்­தோற்­றத்­தி­லேயே இன்றும் காட்­சி­ய­ளிக்­கின்­றன. கடந்த அர­சாங்­கத்தின் இந்த செய­ற­பாட்­டுக்கு வன பாது­காப்பு திணைக்­களம் எதிர்ப்­பினை வெளி­யிட்­டி­ருந்த போதிலும் அதற்கு நட­வ­டிக்­கைகள் எதுவும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

இந்­நி­லையில் இராண்­டா­வது முறையும் இது­கு­றித்து ஆராய குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது.. அந்­தக்­குழு மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கை­க­ளுக்­கான பிர­தான 5 பிர­தே­சங்­களை விடு­விக்­கு­மாறு பரி­ந­து­ரை­களை முன்­வைத்­துள்­ளது. அதற்­க­மைய பாலைக்­குளி வனப்­ப­கு­தியில் 100 ஏக்கர் நிலப்­ப­ரப்பும், மரிச்­சக்­கட்டி பிர­தே­சத்தில் 100 ஏக்­கரும் , கரண்­டி­ன­குளி பிர­தே­சத்தில் 80 ஏக்ரும், காக்­க­நாயன் குளம் 500 ஏக்கர் மற்றும் சன்னார் பிர­தே­சத்தில் 300 ஏக்­கரும் வடு­விக்­கு­மாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்தக் குழுவின் பரித்துரைக்கமைய 2012 ஆம் ஆண்டும் இவவாறு 1080 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிப்பதற்கான அனுமதியும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அந்தப் பரிந்துரைகளுடன் அந்தப் பிதேச பொறுப்பதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் , மேலதிகமாக 2007 ஏக்கர் நிலப்பரப்பினை விடுவிக்குமாறும் அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பரிந்துரைக்கு வனபாதுகாப்பு திணைக்களம் மறுப்பினை வெளியிட்டிருந்தது. .2015 ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சி பொறுப்பினை ஏற்றதன் பின்னர் இந்த வனப்பகுதி தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றமையினால் அதனை பாதுகாக்கப்பட்ட வன பிரதேசமாக அறிவித்திருந்தோம் என்றார்.
Previous Post Next Post