Top News

அரசியலுக்காக கேவலமாக ஹரீஸ் நடந்துகொள்கின்றார் - மன்றில் சாடிய கோடீஸ்வரன் !


கடந்த 30 வருடங்களாக தரமுயர்த்தப்படாமல் இயங்கிவரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் திட்டமிடப்பட்டு தடுக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம் கிராமங்களை உள்ளடக்கியதாக சகல அதிகாரங்களுடன் கல்முனை பிரதேச செயலகம் இயங்கிவரும் அதே வேளை 29 தமிழ் கிராமங்களை உள்ளடக்கியதாக ஆளணி பௌதீக வளங்களுடன் இயங்கிவரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயாத்தப்படுவதால் யாருக்கும் பாதிப்பில்லை, ஆனால் முஸ்லிங்களுக்கு பாதிப்பு உள்ளது போன்ற பொய்யான தோற்றப்பாட்டை மக்கள் மத்தியில் உருவாக்கிய அதற்கூடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் செய்ய முனையும் அரசியல்வாதிகளின் செயற்பாட்டடை முஸ்லிம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பிற்கான விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவருகிறது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயாத்தி தருமாறு த.தே.கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை அமைச்சர் ஹரிஸ் நாடாளுமன்றத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கூடாது என்று நிகழ்த்திய உரைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் அவர்களின் உரையில் பதில் வழங்கி இருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன்அவர்களது உரையில்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்துவதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இந்த கோரிக்கையை பிரதமரிடம் முன்வைத்திருந்தோம் பிரதமரும் ஏற்றுக்கொண்டிருந்தார். ஆனால் நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் ஹரிஸ் அவர்கள் இதனை தரமுயர்த்தக் கூடாது என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகமானது 1989 ஆம் ஆண்டு முதல் உப பிரதேச செயலகமாகவே உள்ளது. இதற்கான ஆளணிகளையும் அதற்கான நிரந்தர கட்டிடம் நிருவாகம் என்பவற்றுடன் 29 கிராம சேவகர் பரிவுகளை உள்ளடக்கியதாக இயங்கிவருகின்றது.

இதற்கென மாவட்ட அபிவிருத்தி குழுவும் அமைக்கப்பட்டுள்ளதுடன் உள்ளக இடமாற்றங்களை செய்யக்கூடிய அதிகாரங்களும் உள்ள இந்த பிரதேச செயலகத்தை 29 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி இயங்கும் இந்த பிரதேச செயலகத்தை நிரதரந்தரமாக்காமல் தடுக்கப்பட்டு வருகின்றது.

வங்குரோத்து அரசியலுக்காக ஹரிஸ் அவர்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு தடையாக இருக்கின்றார். இது கவலைக்குரிய விடயமாகும் 29 கிராம சேவகர் பிரிவுகளுடன் இயங்கிவரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தாது தடுப்பதற்கு இவருக்கு யார் இந்த அதிகாரங்களை கொடுத்த்து.

தமிழர்களின் இடத்தை நிலத்தை பிரித்து சூரையாடுவதற்கு இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையை பிரித்து துண்டாடுகின்ற அந்த வங்குரோத்து அரசியலை கேவலமாக அரசியல் செய்கின்றவராக இந்த ஹரிஸ் அவர்கள் இருக்கின்றார்.

தமிழரின் பிரதிநியை தமிழரின் பிரதேசங்களை தடுத்து நிறுத்துவதற்கு இவர் யார் இந்த பிரதேசத்தை குறைப்பதற்கு இவர் யார் கௌரவ பிரதமர் அவர்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதாக வாக்குறுதி தந்துள்ளார்.

பிரதமர் அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றி தர வேண்டும் சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேதச சபையை பிரித்து கொடுக்க கூடாது என்று ஹரிஸ் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பதும் எங்களுக்கு தெரியும்.

தமிழர்கள் செறிந்துவாழும் கல்முனையில் அவர்களின் கிராமங்கள் உள்ளடங்கியதாக இயங்கிவரும் பிரதேச செயலகத்தை தடுக்க இந்த ஹரிஸ் யார்.

மக்களை பிரித்து தனது வங்குரோத்து அரசியலுக்காக கேவலமாக அரசியல் செய்யும் இந்த ஹரிஸ் அவர்களை வன்மையாக கண்டிக்கின்றேன் என்று த.தே.கூட்;டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் தனது காட்டமான உரையை நாடாளுமன்றில் நிகழ்த்தினார்.


தொடர்புடைய செய்திக்கு ... 

Previous Post Next Post