Top News

யாழ்பாண மன்னனால் கொல்லப்பட்டவர்களே - மன்னார் மனித புதைகுழி உண்மை

மன்னார் மனித புதை குழியில் மீட்க்கப்பட்ட மனித எழும்புக் கூடுகள் யாழ்பாண மன்னனால் கொல்லப்பட்டவர்கன் என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மற்றும் தொல்லியல் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

1550 ஆம் ஆண்டு காலப்பகுதியில் “கிறிஸ்தவ மதத்தை தழுவியமைக்காக போர்த்துக்கேயர் காலப்பகுதியில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

அவ்வாறு யாழ்ப்பாண மன்னன் பரராஜசேகரனால் கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட இடமே மன்னார் மனிதப் புதைகுழி...” என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மற்றும் தொல்லியல் பேராசிரியர் ரி.ஜி.குலதுங்க தெரிவித்துள்ளார்.

பிரபல சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post