Top News

ஜெனீவா வாக்குறுதியை நிறைவேற்ற தேசிய பொறிமுறையொன்று அமைக்கப்பட வேண்டும்



ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு தேசிய பொறிமுறையொன்றை அமைக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். 

இதன் போது பரந்த பின்புலத்திற்குள் அதனை செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 11 ஆம் நாள் ​நேற்றாகும். 

வெளிவிவகாரங்கள், சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் ஆகி அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் நேற்று விவாதம் இடம்பெற்றது. 

இதில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, 2001 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க ரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமை காரணமாக இலங்கையை எந்த சந்தர்ப்பத்திலும் சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல முடியாது. அந்த கௌரவம் பிரதமரையே சாரும் என சமரசிங்க குறிப்பிட்டார். 

இந்த முறை ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அரசாங்கம் முன்வைத்த ஒன்றிணைந்த அறிக்கை தொடர்பிலும் அவர் தமது நன்றியை தெரிவித்தார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)
Previous Post Next Post