கிழக்கு மாகாணத்தில் முகாமைத்துவ உதவியாளர் போட்டிப்பரீட்சையில் சித்திபெற்று நியமனங்கள் கிடைக்கப்படாதவர்கள் தமது நியமனங்கள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை இன்று காலை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து சந்தித்து பேச்சு வார்த்தை நடாத்தினர்.
தாம் பரீட்சையிலும் நேர்முக தெரிவிலும் தோற்றி சித்தி பெற்றும் இது வரை எமக்கு நியமனம் கிடைக்கவில்லை எனவும் இது தொடர்பாக கவனம் செலுத்தி எங்களது நியமனத்தினை மிக விரைவில் பெற்றுத்தருமாறும் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்விடம் இவர்கள் வேண்டு கோள் விடுத்தனர்.
இதற்கமைவாக இந் நியமனங்களின் தடைகள் குறித்து ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இக்குழுவினரிடம் விரிவாக எடுத்துரைத்ததுடன் மிக விரைவில் தங்களது கோரிக்கைகளினை ஏற்று அவற்றினை சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் இடைவெளிகளை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அன்மையில் வெளியான வர்தமானி மற்றும் சட்ட நடவடிக்கை தொடர்பில் தங்களுக்கு ஏதாவது பாதகங்கள் காணப்படுமாயின் அது தொடர்பாகவும் கவனம் செலுத்தி கிழக்கு மாகாணத்தில் மொழி தொடர்பாடலினூடாக பொது மக்களுக்கு இலகுவாக சேவைகளை வழங்கும் வகையிலேயே இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் இது வரை கிழக்கு மாகாணத்தில் காணப்படும் முகாமைத்துவ உதவியாளர் நியமனங்கள் தொடர்பில் இன்னும் இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.