Top News

ஹக்கீமுக்கும், ஹாபீஸுக்கும் முரண்பாடுகள் வெடிக்கிறதா..?


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் ஹாபீஸ் நசீருக்கு, துருவ மயப்படுத்தப்பட்டு ஆட்சி நடத்தும் ஜனாதிபதியும், பிரதமரும் அடுத்தடுத்து உயர் பதவிகளை வழங்கி இருப்பது முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கும் உயர் பீடத்திற்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரதமரின் கீழ் உள்ள திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சின் கீழ் உள்ள தேசிய தொழில் பயிற்சி அதிகார சபை(NAITA) நிறுவன தலைவர் பதவியை பிரதமர் வழங்கி சில வாரங்கள் கழித்து ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஆலோசகராக அவரை நியமித்துள்ளார். இந்த இரண்டு உயர் நியமனங்களும், முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கு தெரியாமல் நடந்து என்று மு.கா வட்டாரங்கள் தெரிவித்தன. 

தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபை தலைவர் பதவி நியமனக் கடித கையளிப்பு நிகழ்வில்  அமைச்சர் ஹக்கீம் கலந்துகொண்டிருந்த போதும், குறித்த நிகழ்வு நடைபெற்ற தினமான அன்று காலையே ஹக்கீமுக்கு அந்த தகவல் கிடைத்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

ஹாபீஸ் நசீருக்கும், ஐ.தே.கவின் முக்கிய புள்ளியான மலிக் சமரவீரவுக்கும் இடையிலான நெருங்கிய நேரடி தொடர்பே இந்த புதிய பதவிக்கு காரணம் எனவும், இந்த அதிரடி நியனம் எதிர்காலத்தில் ஹாபீஸ் நசீரை ஐ.தே.க வின் செயற்பாட்டு அரசியலில் நேரடியாக ஈர்க்கச் செய்வதற்கான காய்நகர்த்தலாக இருக்கும் எனவும்  கூறப்படுகிறது. 

அதே போன்று ஜனாதிபதியும், ஹபீஸே குறி வைத்து தனது காய்களை நகர்த்துகின்றார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை மையமாகக்கொண்டு அண்மைக்காலமாக முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரி உயர் பதவிகளை வழங்கிவருகிறார். அந்த வகையில் கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லாஹ், மேல்மாகாண ஆளுநராக அசாத் சாலி ஆகியோர் வரிசையில் ஹாபீஸ் நசீருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் கட்சித்தலைவருக்கு தெரியாமல் இவ்வாறு ஒரு நடவடிக்கை ஜனாதிபதி எடுத்திருப்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். 

ஐக்கிய தேசிய கட்சியின் தூண்களில் ஒருவராக இருந்து அந்த கட்சி வளர்த்த மலேசியா தூதுவர் முஸம்ம்பில் ஹாஜீயாருக்கும் ஜனாதிபதி தனது அமைச்சான சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய சுற்றாடல் அதிகார சபை தலைமை பதவியை வழங்கியமை இந்த நகர்வை நோக்கிய ஒன்றாகும். முஸ்லிம் வாக்குகள், முஸ்லிம் சமூக கட்சிகளின் வழியாக தமக்கு கிடைக்காது என உறுதியாக நம்பும் ஜனாதிபதி அந்த வாக்குகளை முஸ்லிம் அரசியல் பிரமுகர்களை உடைத்து உடைத்து பதவி வழங்கி பெறாலாம் என கணவு கான்கிறனார்.   

ஏறாவூரின் முக்கியஸ்தர்களான அலிசாஹிர் மெளலானாவுக்கும் ஹாபீஸுக்கும் இடையில் வளர்ந்து வரும் அரசியல் குரோதம் தொடர்ச்சியாக விரிவடைந்து வரும் நிலையில் ரவூப் ஹக்கீம் அலி சாஹிர் மெளலானாவுக்கு தனது ஆதரவுக் கரங்களை நீட்டி வருகின்றார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரான அலி-சாஹிர் மெளலானவுக்கு இராஜாங்க அமைச்சு பதவி பெற்றுக்கொடுப்பதில் ரவூப் ஹக்கீம் காட்டிய தீவிரம் ஹாபீஸின் ஆதரவாளர்களிடையே எரிச்சலூட்டியதுடன் எதிர்வரும் பொது தேர்தலில் ஹக்கீமுக்கு பாடம் புகட்டும் சந்தர்ப்பத்திற்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.

பொது தேர்தலை மையமாக வைத்து ஹாபீஸ் மேற்கொள்ளும் இராஜதந்திர செயற்பாடுகள் ஏறாவூர் அலி-சாஹிர் மெளலானவின் ஆதரவாளர்களுக்காக பீதியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இது தொடர்பில்  ஹக்கீமும் மனக்கலக்கம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

அடுத்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் மட்டு வேட்பாளர் ஹாபீஸா..?  அல்லது அலிசாஹிரா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் எந்த வகையிலையாவது ஹாபீஸ் பொதுத்தேர்தலில் களமிறங்க இருப்பதாக ஹாபீஸின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். 
Previous Post Next Post