Top News

இஸ்லாம் பாடத்தின், நிலை என்ன..?


பிறப்பில் முஸ்லிமாக இருந்தும் இஸ்லாம் பாடத்தில் நமது இளைஞர், யுவதிகளினால் ஒரு சாதாரண சித்தி கூட ஒரு சிலருக்கு எடுக்க முடியவில்லை.... இதற்கு காரணம் யார்?  பொறுப்புடையவர்கள் யார் ??

கணிதப்பாடத்திலும்,விஞ்ஞாப்பாடத்திலும் A சித்தி எடுக்க முயற்சிப்பவர்கள் மற்றும் எடுத்தவர்கள் நமது வாழ்க்கை நெறியான இஸ்லாத்தில் A சித்தி எடுக்க தவறுவதற்கான காரணம் என்ன??

நமது சமூகத்திற்கு மார்க்க கல்வி சரியாக வழங்கப்படாததன் விளைவு தான்!  பல்கலைக்கழகத்திலும்,  கல்வியற்கல்லூரியிலும் கற்பை இழந்து கொண்டிருக்கிறது நம் சமூகம்

மௌலவிமார்கள், உலமாக்கள் தனது ஜமாத் பிரச்சினையை பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது!  இளைஞர்களை நெறிப்படுத்த என்ன ஆரோக்கியமான திட்டம் இந்த ஜமாத்துகளிடம் இருக்கிறது என்றால் வெரும் கேள்விக்குறி தான் ???

ஆலிம்கள், உலமாக்கள் தனது கருத்து வேறுபாடுகளை மறந்து திடகாத்திரமான சிறந்த திட்டங்களை நம் இளையோர் சமூகத்திற்காக எதிர்காலத்தில் கொண்டுவருதல் காலத்தின் கடப்பாடும் இஸ்லாத்தின் அடிப்படையுமாகும்.....


Previous Post Next Post