Top News

முசலி பிரதேச செயலாளருக்கு முசலி பிரதேச சபையில் கடும் கண்டனம்



முசலிப் பிரதேசத்திலுள்ள காணிகள் தொடர்பான விவகாரத்தால் முசலி பிரதேச செயலாளருக்கு இன்றைய முசலிப் பிரதேச சபையின் 13 ஆவது அமர்வில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாவத்துறை நகர் மத்தியில் மக்களுக்கான சந்தைத் தொகுதி, பஸ்தரிப்பு நிலையம் மற்றும் மலசல கூடம் அமைக்கக்கூட காணி இல்லாத அளவுக்கு காணி விடயத்தில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் பிரதேச செயலாளரின் செயல் கண்டிக்கப்பட்டுள்ளது.

முசலிப் பிரதேசத்தில் அரச காணிகள் விற்பனை செய்யப்படுவது குறித்து முசலி மக்கள் மத்தியில் அமைதியின்மை தோன்றியுள்ள நிலையிலேயே இந்த விவகாரம் முசலி பிரதேச சபையில் இன்று எதிரொலித்தது. அண்மையில் காணி விடயமொன்று தொடர்பாக முசலி பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராக முசலி பிரதேச செயலாளர் பொலீசாரை பிழையாக வழிநடத்தி நீதிமன்றத்தில் கிறிமினல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை சட்டத்துக்குப் புறப்பானதாகும்.

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 20, 101, 128, 215 பிரிவுகளின் கீழ் அரச அல்லது தனியார் காணி தொடர்பாக தவிசாளருக்கு சட்ட ரீதியான அதிகாரங்கள் பல உள்ளன.குறித்த சட்டத்தின் 217 பிரிவின்படி பிரதேச சபையின் கடமையைப் புரிய இடையூறு செய்யும் எவரும் குற்றவாளியாவார்.

இவ்விடயம் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கை குறித்து ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

எ.எம்.றிசாத்
Previous Post Next Post