Top News

அப்துர் ராஸிக் வெளிநாடு செல்வதற்கான, தடை நீக்கப்பட்டது.


பொது பல சேனாவினால் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் அப்துர் ராஸிக் மீது பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு 12-09-2019ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக பொது பல சேனாவினால் பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு இன்று (28-03-2019) கொழும்பு, புதுக்கடை நீதி மன்றத்தில் இன்று விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் உறுப்பினர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் ஆற்றிய ஓர் உரையில், பௌத்த மதத்தை நிந்தனை செய்தார் என்று கூறி பொது பல சேனா சார்பில் ஜமாஅத்திற்கு எதிராக குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன தலமையில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இன்றைய விசாரணையில் அப்துர் ராஸிக் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாடு செல்வதற்கான தடை தற்காலிகமாக நீக்கப்பட்டது.

குறித்த வழக்கு விசாரனையில் சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் மற்றும் நுஷ்ரா சரூக், ஷாஹினாஸ் ஆகியோர் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

வழக்கின் அடுத்த விசாரனை இன்ஷா அல்லாஹ்! எதிர்வரும் 12.09.2019ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

எம். எப். எம் பஸீஹ்
செயலாளர்,
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்
Previous Post Next Post