Top News

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட விவகாரம் உணர்ச்சிவசப்படாமல் அணுகப்பட வேண்டும்

- முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம்
ஊடகப்பிரிவு 

குருநாகல் மாவட்டத்தில், குறீகொட்டுவ அல் ஹாதியா இஸ்லாமிய நிறுவனத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை.

கடந்த 13 வருட காலமாக இங்கு இயங்கிவரும் பெண்களுக்கான இந்த கல்வி நிறுவனம் இவ்வளவு தூரம் பிரசித்தமடைந்து, இலங்கையின் நாலாபுறங்களிடமிருந்தும்மாணவியர்கள் இங்கு வந்து பூரணத்துவமுடைய இஸ்லாமிய பெண்களாக தாய்மாராக வெளியேருகின்ற விவகாரம் பெரிதும் வரவேற்கத்தக்கது. இந்த நாட்டில் கடந்தஇரண்டு தசாப்தங்களுக்கு மேலாக பல இடங்களிலும் இவ்வாறானதொரு புதிய பரிமாணம் உருவாகிக் கொண்டு வருகின்றது.

இதனூடாக வெறும் மாமூலான கல்வி என்பதை விடுத்து, மார்க்ககக் கல்வியையும் அதேவேளை அறபு போன்ற மொழித்திறமைகளையும் இதனுடன் முன்னேற்றி, அதனூடாக உயர்கல்வி பெறுவதற்கான ஒரு நுழைவுக்கு இன்னும் சிறப்பாக மாணவியரை தயார்படுத்துகின்ற விடயத்தை இவ்வாறான கலாபீடம் நிறைவு செய்துவருவதென்பது பரந்தளவில் வரவேற்பைப் பெற்றிருக்கின்ற ஒரு விடயமாகவும், குறிப்பாக சுயமுயற்சியின் பேரில் இதில் ஊக்கமுள்ள பலர் இப்படியானசெயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதென்பது இந்த சமூகத்திலிருந்து வந்த ஒரு பெரிய இடைவெளியை நிரப்புகின்ற பங்களிப்பைப் செய்வதாகும்.

இதை நாங்கள் வரவேற்கின்ற அதேநேரம், இன்றைய சமூக சூழலில் முஸ்லிம் பெண்களுடைய குறிப்பாக எங்களுடைய பெண் பிள்ளைகளுடைய சமூக அந்தஸ்துசம்பந்தமான விவகாரம் பலவாறு வித்தியாசமான சவால்களை எத்ர்நோக்கியிருக்கின்ற ஒரு காலகட்டத்தில் இவ்வாறான கலாசாலைகளின் உருவாக்கமும், பங்களிப்பும்என்ற விவகாரம் எவ்வாறான ஒரு பரிமாண மாற்றத்தை உருவாக்கி வருகின்றது என்பது மிக கூர்மையாக அவதானிக்கப்படக் கூடிய விடயமாகும்.

இன்று முஸ்லிம் சமூகத்தில் முஸ்லிம் பெண்களுடைய அந்தஸ்து சம்பந்தமான விவகாரம் மாற்று சமூகத்தவர்கள் மத்தியில் விமர்சனத்துக்குரிய ஒரு விடயமாகபார்க்கப்படுகின்றது. முஸ்லிம் சமூக கட்டமைப்பிலிருக்கின்ற சமய கலாச்சார வரையறைகளை பற்றி சரியான ஒரு புரிதல் இல்லாமல் என்பதை விடவும், நாங்கள்அவர்களை புரிய வைப்பதில் தவறிழைப்பதன் மூலம் இவ்வாறானதொரு ஒரு புதிய கருத்தாடல் உருவாகி வருகின்றது.

எடுத்ததை எல்லாம் ஒரு சந்தேகக் கண்ணோடு பார்க்கின்ற ஒரு காலச் சூழலில் முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் அந்தஸ்து என்கின்ற விவகாரம் இன்று உலகளாவியரீதியில் இஸ்லாமோபோபியா எனப்படும் இஸ்லாத்தின் மீதான பீதி மனப்பான்மை என்கின்ற கதையாடலில் ஒரு முக்கியமான பரிமாணமாக ஆகியிருக்கின்றது. எங்களுடைய சமூகத்தில் பெண்களுடைய அந்தஸ்து சம்பந்தமான விவகாரம் அவர்களுடைய எல்லா நடவடிக்கைகளையும் விமர்சனத்திற்குள்ளாகின்ற விடயமாகஇருக்கின்றது. எமது சமூகம் பெண்கள் குறித்து கடைபிடிக்கின்ற நடைமுறைகள், சட்டதிட்டங்கள் சம்பந்தமாகவும் ஒரு விமர்சன போக்கோடு பார்க்கின்ற ஒரு காலத்தில்நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

அதேவேளை, இஸ்லாமிய அடிப்படை உசூல்களுக்கு-மார்க்கவிதிகளுக்கு மாற்றமில்லாமல் சில மறுசீரமைப்புகளையும் நாங்கள் புறந்தள்ள முடியாது. சீர்திருத்தம்என்பது காலப்போக்கில் வருகின்ற விடயம். நேற்று பிபிசி தொலைக்காட்சியில் பெண்களின் வாக்குரிமை சம்பந்தமாக ஒரு விவரணப் படமொன்றை பார்த்துஆச்சரியப்பட்டேன். 1959ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை அங்கீகரிக்கப்பட்டது. இலங்கையில் 1931ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமையைஅங்கிகரிக்கப்பட்டது. 1950ஆம் ஆண்டளவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும் என்கின்ற அந்த போராட்டத்தில் முன்னிலையில் இருந்த ஒரு சுவிட்ஸர்லாந்துபெண்மணியை பேட்டி காண்கின்றார்கள். அப்பெண்மணி அனுபவித்த கஷ;டங்களை சொல்லுகின்ற அதேநேரம், அந்த கட்டத்தில் சுவிட்ஸர்லாந்து தொலைக்காட்சியில்ஒளிபரப்பான அதை எதிர்த்து பேசுகின்ற ஆண்களுடைய நிலைப்பாடு பற்றியும் காண்பித்தனர். பெண்களுக்கு இந்த வாக்குரிமையெல்லாம் தேவையில்லை எனஅவர்கள் கூறினர்;. அவர்கள் வீட்டில் இருக்க வேண்டும். அவர்கள் பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டும். இது சுவிட்ஸர்லாந்தில் 1950ஆம் ஆண்டு காலப் பகுதியில் நடந்தவிஷயமாகும்.

1959ஆம் ஆண்டு உலகிலே ஆகக்கூடிய தனிநபர் வருமானம் பெறுகின்ற நாடுகளில் ஒன்றாக இருந்து வளர்ந்திருக்கின்ற சுவிட்ஸர்லாந்தில் 1960ஆம்; ஆண்டு வரையும்பெண்களுக்கு வாக்குரிமை கூட வழங்குவதற்கு தயாரில்லாமல் இருந்த ஒரு சமூகத்தில் அதற்காக ஒரு இளம் பெண்ணாக போராடிய ஒருவர் 1980ஆம் அண்டு அந்தநாட்டின் ஜனாதிபதியாக வந்தார்; என்ற விவகாரத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.

இந்த விவகாரத்தில் மேற்குலகம் எப்படியான ஒரு பரிணாம வளர்ச்சியை இந்த துறைகளில் அடைந்திருக்கின்றது என்று ஒப்பிட்டு ரீதியாக பார்க்கின்ற போது எமதுசமூகத்தில் இருக்கின்ற சீர்திருத்தம் சம்பந்தமாக நாங்கள் இதை ஒரு விமர்சனத்திற்காக, ஒரு விவாதத்திற்காக இந்த விடயங்களை திருப்பி பேசலாம். நான் எதைசொல்லவருகின்றேன் என்றால் இப்பொழுது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக, அதிலும் பாராளுமன்ற உறுப்பினர் மீது சுமத்தப்படுகின்ற மிகப் பெரிய விமர்சனமாகசொல்லப்பட்டு வருகின்ற ஒரு விவகாரம் முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஏற்படுத்தப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் சம்பந்தமான விடயங்களாகும். இப்பொழுது இது ஒருபெரிய பேசு பொருளாக மாறியிருக்கின்றது.

எல்லாவற்றையும் இங்கு பேசப்போனால் அதை பற்றிப் பேசுவதும் கொஞ்சம் சங்கடமான விடயம்தான். அதுவும் சர்ச்சைக்கு வழிகோலிவிடும் என்ற அச்சம் வேறு. நான்அரசியல்வாதியாக இருப்பது இன்னொரு காரணம். இருந்தாலும் சில விடயங்களை பேசாமல் இருக்க முடியாது.

இன்றிருக்கின்ற முஸ்லிம் தனியார் சட்டத்திலிருக்கின்ற ஒரு திருத்தப்பட வேண்டிய விவகாரம். இன்று தீவிரமாக ஆராயப்படுகின்றது. அதிலுள்ள இணக்கப்பாட்டில்கொஞ்சம் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. திருமண வயது சம்பந்தமான விவகாரம் முக்கியமானது. இதில் கடும்போக்கை கடைப்பிடிக்கின்ற ஒரு குழுவினரும்அதேநேரம், இந்த சீர்திருத்தம் அவசியம் என வாதாடுகின்ற குழுவினரும் உள்ளனர். இது சம்பந்தமாக நானும் சற்றுக் கூடுதலாக கட்டாயம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்;என்பதால் தேடிப் பார்த்ததில் நான் அறிந்து கொண்ட விடயம் குர்ஆனிலோ, ஹதீஸிலோ தெளிவாக சொல்லப்படாத ஒரு விடயமாக திருமண வயதெல்லை என்பதுஉள்ளது. ஆனால் எங்களுடைய முஸ்லிம் தனியார் திருமண விவாக, விவாகரத்து சட்டத்தில் அதற்கென்று அனுமதிக்கப்பட்ட வயது எல்லையாக 12 வயதைகுறிப்பிட்டிருக்கின்றர்கள். இது மாற்றப்பட வேண்டும் என்பது இன்றிருக்கின்ற மிக முக்கியமான ஒரு பிரச்சினையாகும். இளம் பராயத் திருமணத்தினால் ஏற்படுகின்றபாதிப்புக்கள் என்பதை அடையாளம் கண்டு இதில் மாற்றம் வர வேண்டும் என்ற ஒரு பிரசாரம் தலைதூக்கியிருக்கின்றது.

இதை ஒப்புநோக்கி பல விதமான விடயங்களை பார்க்கின்ற போது, ஏராளமான முஸ்லிம் நாடுகளில் 18 வயதை திருமண வயதெல்லையாக ஆக்கியிருக்கின்றார்கள். எமது நாட்டைப் பொறுத்தமட்டில் இன்று சிறு பராயத் திருமணம் என்பது மிக அபூர்வமாகத்தான் நடக்கின்றது. ஆனால் அது சட்ட ரீதியாக தடை செய்யப்பட வேண்டும்என்பதற்கான பல காரணிகள் முன்வைக்கப்படுகின்றன. நான் நினைக்கின்றேன் இந்த மண்டபத்தில் குழுமி இருக்கின்ற தாய் மற்றும் தந்தைமாரும் தங்களுடையபுதல்வியரை போதிய பக்குவமடையாத ஒரு வயதில் திருமணம் செய்து கொடுப்பதற்கு உடன்படமாட்டார்கள் என்பதை நம்பிக்கையுடன் கூறலாம்;.

ஆனால் இன்னும் இது சம்பந்தமான இழுபறி ஏன் இருக்கின்றது? இதை திருத்துவதற்காக நாங்கள் கொஞ்சம் இந்த சீர்திருத்தத்தில் சம்பந்தப்பட்ட எல்லாத்தரப்புக்களையும் அழைத்து பாராளுமன்றத்தில் இரண்டு, மூன்று தடவைகள் சந்தித்து கலந்துரையாடிவிட்டோம். இப்பொழுது வயதெல்லையை 16ஆக ஆக்க வேண்டும்எனக் கூறப்படுகின்றது. அதேநேரம், காதியுடைய அனுமதியோடு அதற்கு குறைவாகவும்; அனுமதிக்கலாம் என்பது போன்ற ஓர் உடன்பாடு பற்றி கடும்போக்கைகடைப்பிடிப்பவர்கள் சொல்ல வருகின்றார்கள். என்னைப்பொறுத்தமட்டில் இன்னும் கொஞ்சம் நெகிழ்வுப் போக்கை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஏனென்றால்முஸ்லிம் சமூகம் ஒரு ஆணாதிக்க சமூகமாக விமர்சிக்கப்படுகின்ற ஒரு நிலையில், அல்குர்ஆனிலோ, ஹதீஸிலோ திட்டவட்டமாக இந்த வயதில் தான் திருமணம் முடித்துவைக்க வேண்டும் என்று சொல்லப்படாத ஒரு நிலையில், இந்த விவகாரத்தில் பிடிவாதக் கொள்கையை கடைப்பிடிப்பதென்பது நானும் இரண்டு பெண்பிள்ளைகளின்தந்தை என்பதனால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விடயமாகத்தான் இருக்கின்றது.

ஆனால், இதில் ஒரு கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு மிகவும் கஷ;டப்பட வேண்டியிருக்கின்றது. ஏனென்றால் இது குறித்து மிக திறந்த மனதோடு அணுகப்படவேண்டும். அதேநேரம் இந்த விமர்சனங்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. மாற்று சமூகத்தவர்கள் மத்தியில் இருந்து வரும் அழுத்தங்களுக்காக நாங்கள் எங்களதுநிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டுமென்பதும் அல்ல. எங்களுடைய சமூகத்துக்குள்ளே இருந்துதான் சீர்திருத்தம் வர வேண்டும். ஆனால் இந்த விவகாரம்சம்பந்தமாக சொல்லப்படுகின்ற சில விடயங்களில் மாற்றங்கள் வரலாம். ஏனென்றால் இஸ்லாத்தில் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) செய்த சில விவகாரங்கள் கூடகடமையாகவோ, சுன்னத்தாகவோ கொள்ளப்படுவதில்லை. ஆயிஷh நாயகியின் திருமணத்தை பற்றிக் கூறப்படுகின்றது. நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்)அவர்களுடைய ஏனைய எல்லா மனைவிமாரும் ஆயிஷh நாயகியைத் தவிர வயதில் மூத்தவர்கள். ஆனால் அந்த விவகாரம் கூட இதற்கு ஏற்புடையதல்ல. அந்தசெயற்பாட்டை மாத்திரம் வைத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது. நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறைதூதர் என்ற முறையில்அல்லாஹ்விடத்தில் இருந்த விஷேடமான சில சலுகைகள் இருந்தன. அதேநேரம் மற்றைவர்களுக்கு விதிக்கப்படாத கடினமான சில கடமைகளும் இருந்தன. தஹஜ்ஜத்தொழுகை நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு கட்டாய கடமையாக - பர்ளாக இருந்தது. அத்துடன் நபிகளார் சில நோன்புகளைக் கூட உரிய நேரத்தில்திறக்காமல் தொடர்ந்தும் நோன்போடு இருக்கின்ற வழமை இருந்திருக்கின்றது. அதை சில ஸஹாபாக்கல் செய்ய முன்வந்த போது நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) தடுத்தார்கள். 'இது எனக்கு மாத்திரம் இருக்கின்ற விடயமே ஒழிய உங்களுக்கு அல்ல. நீங்கள் உரிய நேரத்திற்குள் நோன்பை திறந்து விட வேண்டும்' என்றனர்.இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு எல்லாக் காலத்திற்கும் எல்லா நிலைமைகளிலும் இவற்றை ஏற்புடைய விடயங்களாக சொல்ல வருவதிலும் பல சிக்கல்கள்இருக்கின்றன.

இப்போது, நாங்கள் இஸ்லாத்தில் அடிமைகள் குறித்த விடயத்தை எடுத்துக் கொண்டால், அல்குர்ஆனிலும், ஹதீஸிலும் பல இடங்களில் அடிமைகள் பற்றிசொல்லப்படுகின்றது. ஆனால் அடிமைத்தனத்தை தடை செய்ததாகவோ அதை ஏற்றுக் கொள்ளாத விடயமாகவோ திட்டவட்டமாக எதுவுமில்லை. குர்ஆனை வாசிக்கப்போனால் அடிமைகளை வைத்திருக்கலாம் என்ற வாறுதான் எல்லோரும் வியாக்கானம் சொல்ல வருவார்கள் அப்படியல்ல, காலப்போக்கில் அடிமைத்தனம் அடிமைகளைவைத்திருப்பதென்பது மனித சமூகத்தின் வளர்ச்சியோடு கைவிடப்பட்ட விடயமாக, இஸ்லாமும் அதனை ஏற்றுக் கொண்டு மாற்றமடைந்தது. அது இஸ்லாமியசமூகத்தில் மாத்திரமல்ல ஏனைய சமூகங்களிலும் இருந்தது. ஏன் இந்த நூற்றாண்டில் கூட கால்வாசிப் பகுதி வரையும் ஐக்கிய அமெரிக்காவில் அடிமைத்தனம் இருந்ததுஎன்றால் இன்று எல்லோருக்கும் மனித நேயத்தை போதிப்பதற்கு முன்வந்துள்ள மிகப் பெரிய வல்லரசு கூட இந்த விவகாரத்தில் கறுப்பர்களை அடிமைகளாக வைத்துநடத்திய விடயம் காலப் போக்கில் பரிணாம மாற்றத்தோடு படிப்படியாக கைவிடப்பட்டது.

1960 வரையும் அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு இருந்த விடயம் மற்றும் 1980களில் தென்னாபிரிக்காவில் கறுப்பர்களை தனியாக பிரித்து அவர்களுக்குவேறுபாடுகள் காட்டிய விவகாரம் எல்லாவற்றையும் வைத்து பார்க்கின்ற போது ஒரு பரிமாண மாற்றத்திற்கு எல்லா சமூகங்கள் மத்தியிலும் வழிகோலப்பட்டது. குறிப்பாக தனிப்பட்ட வாழ்க்கை பற்றி விவகாரம் இவ்வாறு இருக்கதக்கதாக இதில் ஏன் சில விடயங்களில் மிக கடுமையான பிடிவாத போக்கில் நாங்கள் இருக்கவேண்டும்? இதில் சில நெகிழ்வுத் தன்மைகள் கட்டாயம் தேவைப்படுகின்றன. சீர்திருத்தம் தேவை, அதிலும் குறிப்பாக பெண்கள் குறித்த விவகாரங்களில் கூடுதல்கவனம் செலுத்தப்பட வேண்டும். இன்று பெண்கள் கல்வி வளர்ச்சியில் மிக வேகமாக முன்னேறி வருகின்றார்கள்.

உயர்கல்வி அமைச்சராக இருக்கின்ற காரணத்தினால் சில பீடங்களை குறித்து கேட்கின்ற போது என்னுடைய மகள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பீடத்தில்கற்கின்ற படியால் 240 மாணவர்களில் 203 பேர் பெண்கள் என அறிந்தேன். பல்கலைக்கழக நுழைவில் இது எல்லா சமூகங்கள் மத்தியிலும் இருக்கின்ற ஒரு விவகாரமாகும். ஒரு காலத்தில் இலங்கையில் முஸ்லிம் பெண்களை பாடசாலைக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்துக் கொண்டிருந்த காலமும் இருந்தது. பிற மத பாடசாலைகளில் படிக்கவிட்டால் தங்களுடைய சமயவிழுமியங்கள் தவறிப்போய்விடும் என்ற அச்சத்தில் பெற்றோர் தடுத்து வைத்திருந்தனர். அவையெல்லாம் மாற்றமடைந்து இப்பொழுது ஒருபெரிய யுகமாற்றத்தை அடைந்து கொண்டிருக்கின்றோம். இந்த யுகமாற்றத்தில் பெண்கள் குறித்த சீர்திருத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகமாறிவருகின்றது.

இன்னும் பல விடயங்களை பேசலாம் ஆனால் இன்னும் இன்னும் சர்ச்சையைக் கூட்டுவதற்கான விடயமாக அது மாறிவிடலாம். ஆனால் படிப்படியாக இதில் மாற்றம்ஏற்படுவததென்பது தவிர்க்க முடியாதது. அது சமூகம் உள்வாங்க வேண்டிய விடயமாகும். இதில் நாங்கள் தெளிவு காண வேண்டும்.

எங்களுக்குகெதிரான விமர்சனங்களை குறைப்பதற்கும் இதனூடாக நாங்கள் வழிகோல வேண்டும். நாங்கள் பிடிவாதப் போக்கோடு இருப்பதனால் தவறானஅடிப்படையில் இஸ்லாமிய சமூகம் ஒரு ஆணாதிக்க சமூகமாக பார்க்கப்படும் நிலவரம் ஏற்பட்டுவிடும். இதில் உரிய மாற்றங்கள் இஸ்லாத்தை அனுசரித்துமேற்கொள்ளப்பட வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயமாகும். அது நோக்கிய விடயங்களை சர்ச்சைக்குரிய பாதிக்கப்பட்ட விடயமாக இருந்தாலும்இன்னும் கூர்மையாக இந்த விவகாரங்களை நாங்கள் உணர்ச்சி வசப்படாமல் அணுக வேண்டும்;. நாங்கள் கலந்துரையாடிய சந்தர்ப்பங்களில் சிலர் மிக மோசமாகஉணர்ச்சி வசப்பட்டார்கள். முக்கியமான பெரும் பொறுப்புக்களில் இருக்கின்றவர்கள் கூட அளவுக்குமீறி உணர்ச்சிவசப்பட்டு, கலந்துரையடல்களில் இருந்து எழுந்துசென்ற நிலவரங்கள் ஏற்பட்டன. அவ்வளவு தூரம் உணர்ச்சிவசப்படுவது அவசியமில்லை. இவற்றையெல்லாம் சற்று நிதானமாகவிருந்து, பக்குவமாக இதனுடையவிளைவுகளைப் பற்றிய விடயங்களை அலசி ஆராய்ந்து சரியான ஆதாரங்களோடு முன்வைக்கப்படுகின்ற வாதங்களை ஜீரணித்துக் கொண்டு சில மாற்றங்களைமேற்கொள்ளக் கூடியவாறு நாங்கள் நகர்ந்தே ஆக வேண்டும் என்பது முக்கியமானது.
Previous Post Next Post