அரச வருமானத்தை பலப்படுத்திக்கொள்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்த ஜனாதிபதியால் நாட்டில் பெரும் மாற்றமொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.
இன்று-28- கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், அரச நிறுவனங்களில் மோசடிகள் அதிகரித்து காணப்படுவதாக குற்றசாட்டியதுடன், 2020 ஆம் எந்த வீரர் நாட்டை பொறுப்பேற்றாலும் அவர் மேற்படி நிலைப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
இந்நிலை தொடர்ந்தால் இன்னும் இரு வருடங்களில் நாடு பாரதூரமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என தெரிவித்த அவர், அரச நிறுவனங்கள் ஊடாக கிடைக்கப்பெரும் வருமானம் முழுமையாக கிடைத்தால் வரவு செலவு திட்ட பற்றாக்குறையை இலகுவாக நிவர்திக்க முடியும் என்றார்.