Top News

O/L மீள் பரீட்சித்தல் கால எல்லை 12 ஆம் திகதி வரை



நேற்று வெளியான 2018 ஆம் ஆண்டிற்குரிய க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறு விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பரீட்சார்த்திகள் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பதிவுத் தபாலில் விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்கள் இன்று தேசிய பத்திரிகைளில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

(அரசாங்க தகவல் திணைக்களம்)



Previous Post Next Post