TNA இருக்கும் வரை UNPக்கு வெற்றியே - பந்துல

NEWS
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு காணப்படும் வரை சமர்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவு திட்டம் தோல்வியடையும் என நாம் எதிர்பார்க்க வில்லை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களையும் தவிர்த்து பார்க்கும் போது ஐக்கிய தேசிய கட்சிக்கு 103 ஆசனங்கள் மாத்திரமே காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவினுடைய காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

எதிர் வரும் 2025 ஆம் ஆண்டு அதிக கடன் பெறும் நாடுகள் வரிசையில் இலங்கைக்கே முதலிடம் கிடைக்கும். கடந்த 2018 ஆண்டில் மாத்திரம் சுமார் நூற்றுக்கு 7 வீத வட்டியில் 35 வெளிநாட்டு கடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 1138 பில்லியன் ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு பெற்றப்பட்ட அனைத்து கடன் தொகையும் சாதாரண மக்கள் மீது வரிச்சுமையாக திணிக்கப்பட்டுள்ளது. எனவே மக்களே இந்த கடன் முழுவதையும் செலுத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.
6/grid1/Political
To Top