மாவனல்லை ஸாஹிராவின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளை ஏற்பாட்டில் நடைபெற்ற "xzahirians ஆட்டம்" கால்பந்து சுற்றுப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை, மார்ச் 15 ஆம் திகதி அல் அரபி விளையாட்டு அரங்கத்தின் புட்ஸால் மைதானத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஸாஹிராவின் பழைய மாணவர்கள் veterans மற்றும் elite என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடந்தேறிய இச்சுற்றுப் போட்டியில், 35 வயதிற்கு மேற்பட்டோர் veterans கிண்ணத்துக்காகவும், 35 வயதிற்கு குறைந்தவர்கள் elite கிண்ணத்துக்காகவும் போட்டியிட்டனர். Elite குழுவில் எட்டு அணிகளும் veterans குழுவில் நான்கு அணிகளும் போட்டியிட்டன.
ஸாஹிராவின் பழைய மாணவரும் தற்போது விளையாட்டுத்துறை ஆசிரியராகவும் பணியாற்றிவரும், ஸாஹிரா கல்லூரிக்கு கால்பந்து, கோலூண்டி பாய்தல் மற்றும் பல தேசிய மட்ட வெற்றிகளை பெற்றுத்தந்த Z.A.M. Zameel அவர்களுக்குக்கான கௌரவிப்பாக ZAM Zameel வெற்றிக் கிண்ண சுற்றுப் போட்டியும் இடம்பெற்றது. இதில் மாவனல்லை பகுதி சகோதர பாடசாலைகளான பதுரியா, அல் அஸ்ஹர், நூரானியா, மதீனா மற்றும் தெல்கஹகொட க.வி. பழைய மாணவர் அணிகள் பங்குபற்றின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போராட்டித் தொடரில் இறுதிப் போட்டியில் மதீனா மு.ம.வி அணியும் ஸாஹிரா அணியும் மோதியதுடன், ஸாஹிரா அணி 6 - 1 என்ற கோல் வித்தியாசத்தில் ZAM Zameel வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. இப்போட்டித் தொடரின் ஆட்ட நாயகனாக ஸாஹிரா அணியின் முன்னணி வீரர் முஹம்மத் அஸ்மான் தங்க காலணி விருதை பெற்றுக் கொண்டார்.
Xzahirians ஆட்டம் Veterans கிண்ணத்துக்கான இறுதிப் போட்டி Lions அணிக்கும் Jaguars அணிக்கும் இடையில் இடம்பெற்றது. 2 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் Jaguars அணி சாம்பியன்ஸ் ஆனது. Elite குழுமத்தின் போட்டிகள் மிக விருவிருப்பாக அமைந்ததுடன், Raiders மற்றும் Cowboys அணிகள் மோதின. இப்போட்டியில் உறிய நேரம் முடிவடைந்தபோது 1 - 1 என்ற நிலையில் முடிவடைந்தது. இதனடிப்படையில் மேலதிக நேரம் வழங்கப்பட்டதுடன், cowboys அணியின் நட்சத்திர வீரர் அஸ்மான் காலில் ஆபாதைக்குற்பட்டார். மேலதிக நேரத்திலும் போட்டி சமமாக முடிவடைந்தது. Raiders அணி penalty முறையில் 2 - 1 என்ற கோல் கணக்கில் xzahirians ஆட்டம் Elite Champion ஆனது.
பின்வரும் வீரர்கள் சிறப்பாக விளையாடி சிறந்த வீரர்களுக்கான விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
Xzahirians ஆட்டம் Elite ஆட்ட நாயகன் : முகம்மத் அஸ்மான்
Xzahirians ஆட்டம் Elite சிறந்த பந்து காப்பாளர் : முகம்மத் ஷர்ஹான்
Xzahirians ஆட்டம் Veterans ஆட்ட நாயகன் : முகம்மத் அஸ்லம்
Xzahirians ஆட்டம் Veterans சிறந்த பந்து காப்பாளர் : முஹஸ்ஸம் மொஹிதீன்
இச்சுற்றுப் போட்டியின் நோக்கங்கள் பற்றி ஸாஹிரா பழைய மாணவர் சங்க கட்டார் கிளை தலைவர் முகம்மத் லாபிர் கருத்து தெரிவிக்கையில், "இச்சுற்றுப் போட்டியின் நோக்கம் கட்டார் வாழ் எமது ஸாஹிராவின் பழைய மாணவர்கள் மத்தியிலான உறவை மேம்படுத்துவதும் வளர்ப்பதும் ஆகும். மேலும் கத்தாரின் மாவனல்லை பிரதேச இதற பாடசாலை பழைய மாணவர்களுக்கிடையிலான உறவை மேம்படுத்துவதும், ஸாஹிறாவின் வரலாற்றில் அதன் வெற்றிகளின் பின்னணியில் இருக்கும் பழைய மாணவர்களின் பங்களிப்பை கௌரவிப்பதுமாகும் என தெரிவித்தார். மேலும் இச்சுற்றுப் போட்டியை சிறந்த முறையில் நடத்தி முடிப்பதற்காக சகல விதத்திலும் உதவிய நிர்வாக குழு உறுப்பினர்கள், அங்கத்தினர்கள்,பங்குபற்றிய அனைத்து பாடசாலை அணிகளினதும் பழைய மாணவர்கள், மற்றும் நிதி ஆதரவு தந்து உதவிய நிறுவனங்களுக்கும் தனது நன்றிகளை தெறிவிப்பதாகவும் கூறினார்.
இந்நிகழ்வில் ஸாஹிராவின் பழைய மாணவர்கள், குடும்ப உறுப்பினர்கள், மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
ஷம்ரான் நவாஸ் (துபாய்)