மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட 04வர் நாடு கடத்தப்பட்டனர்.

Ceylon Muslim
பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனுடன் மேலும் நால்வர் டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். 

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். 

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து இருவரிடமும் தற்சமயம் விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
6/grid1/Political
To Top