நாடு கடத்தப்பட்ட நடிகர் ரயன் வேனுக்கு 11 ஆம் திகதி வரை விளக்கமறியல்

Ceylon Muslim
0 minute read
 கைது செய்யப்பட்ட நடிகர் ரயன் வேன் ரூயன் (Ryan Van Rooyen) எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, பிரதம நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான் இசுறு நெத்திகுமார இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மாகந்துரே மதுஷுடன் துபாயில் கைது செய்யப்பட்ட நடிகர் ரயன் நேற்று (04) அதிகாலை நாடு கடத்தப்பட்டார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளை அடுத்து, அவர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ரயனின் காரில் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் இதன்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

6/grid1/Political
To Top