Top News

420 வீடுகளை வவுனியாவில் ஆரம்பித்து வைத்தார் ரிப்கான் பதியுதீன்!




கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி தொழிற் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது 

சுமார் 420 தேர்ந்தெடுக்கப்பட்ட மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத்திட்டம் வழங்கும் இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி தொழிற் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் 

இதன்போது உரையாற்றுகையில் 

" வவுனியா மாவட்டத்திற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் தீவிர முயட்சியினால் 420 வீடுகளை வழங்கும் நிகழ்விற்கு வருகை தந்தமையிட்டு நான் சந்தோசம் அடைகின்றேன் ஏனென்றால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு எமது சொந்த மண்ணிலிருந்து பலவந்தமாக துரத்தப்பட்டதையும் உயிரை தவிர இழப்பதற்கு ஏதும் இல்லாத நிலையினை பார்த்து அனுபவித்த மக்கள் நாம் என்பதனையும் மறக்க முடியாது இன்று பல பிரதேச சபை உறுப்பினர்களையும் மாகாண சபை உறுப்பினர்களையும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் இரண்டு பிரதி அமைச்சர்களையும் தன்வசம் கொண்டுள்ளதோடு இலங்கை நாட்டில் எந்த ஒரு அமைச்சருக்கும் கொடுக்கப்படாத வகையில் 5அமைச்சுக்களை வைத்திருக்கின்ற அமைச்சராகவும் ஒரு கட்சியின் தலைவராகவும் இருக்கின்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் முதல்கொண்டு நான் அதுபோன்று எமது கட்சியில் இருக்கின்ற பலர் இந்த துன்பத்தினை அனுபவித்திருக்கின்றார்கள் இலங்கை நாட்டில் வீட்டுத்திட்ட அமைச்சர் கூட செய்யாத அளவிற்கு பல்லாயிரக்கணக்கான வீடுகளை நிர்மாணித்து தங்களது சொந்த கிராமங்களிலேயே குடியமர்த்தி சாதனை படைத்திருக்கின்றார் இந்த சாதனை அன்று எமக்கு ஏற்பட்ட யுத்தத்தின் சோதனைக்கு மருந்தாக இன்று அமைந்திருக்கின்றது எமது சிறுபான்மை சமூகத்தினை அது முஸ்லீமாக இருக்கலாம் தமிழராக இருக்கலாம் பாகுபாடுகள் இன்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றார் ஆனால் அன்று அகதிகளாக உணவு இன்றி உறங்க இடமின்றி வேறு மாவட்டங்களில் குடியேறி அகதிகள் என்னும்பெயரோடு வாழ்ந்த நாங்கள் இன்று மீண்டும் தமது சொந்த மண்ணிற்கு மீள்குடியேற வேண்டும் என்று பல போராட்டங்களுக்கு மத்தியில் அதற்கான வேலைகளை செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் இன்று பேரினவாதிகளின் இனப்பசிக்கு இறையாகிக்கொண்டிருக்கின்றார் ஆனால் தன் குடும்பத்திற்காகவோ அல்லது தனக்காகவோ ஒரு அங்குல காணிகளை கூட பெறவில்லை மக்களுக்காக இந்த சமூகம் அகதிகளாக இருந்து பட்ட துன்பங்களை எதிர்கால சந்ததிகள் பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவர் செய்த முயட்சிக்கு பலனாகவே இந்த கொடும்பாவி எரிப்புக்கள் அவர்களுக்கு எதிரான பேரினவாத அம்பு வீச்சு போன்றன நடைபெறுகின்றது 


இவ்வாறான நிலைகள் இருந்தபோதும் இறைவனை துணையாக கொண்டு மீண்டும் மீண்டும் இந்த சமூகத்திற்காக ஒரு தனி மனிதனாக போராடி வருகின்றார் இவ்வாறான ஒரு சமூக பற்றுள்ள வடக்கு மாகாணத்துக்கே ஒரேயொரு அமைச்சராக இருக்கின்ற எமது தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களை இல்லாமல் செய்ய பல சாதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இந்த சாதிகளின் முஸ்லீம் அரசியல்வாதிகளும் முழு முயட்சியோடு இருக்கின்றார்கள் என்பது உண்மையில் மனவருத்தமான ஒரு செயலாக இருக்கின்றது அரசியல் வாதிகள் அவர்களுடைய அரசியல் இலாபத்திற்காக இவ்வாறான விடையங்களை செய்யலாம் ஆனால் நாங்கள் சிந்திக்க வேண்டும் அன்று நீங்கள் உங்கள் சொந்த மண்ணுக்கு வரமுடியாத நிலையில் இருந்த போது யார் உங்களை மீள்குடியேற்றம் செய்தது மீள்குடியேறிய பின்பு அடிப்படை வசதிகள் இன்றி நீங்கள் தவித்தபோது அதை யார் செய்து தந்தது ஓலை குடிசைகளில் இருந்த போது யார் உங்களை பெறுமதியான வீடுகளை கொடுத்து நிம்மதியாக வாழவைத்தது பாடசாலைகள் மரத்தடி நிழலில் இருக்கும் பொழுது பலமாடிக்கட்டடங்களாக யார் மாற்றித்தந்தது 

இன்று அரசியல் பேசித்திரியும் புதிய அரசியல் வாதிகள் அல்ல கட்சிப்பாடலை வைத்து அரசியல் செய்பவர்கள் அல்ல நீங்கள் தேர்ந்தெடுத்த உங்களோடு அகதி வாழ்க்கை வாழ்ந்த இந்த ரிஷாட் பதியுதீன் அமைச்சர்தான் எனவே நீங்கள் அவருக்காக செய்ய வேண்டியது இவருடைய நீண்ட ஆயுளுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வது ஒன்றுதான் அதேபோன்று எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது மக்களுக்காகவே சேவை செய்யக்கூடியது இதில் இருக்கும் ஒவ்வொருவரும் மக்களுக்காக பாடுபட்டவர்கள் பாடுபட்டு கொண்டிருப்பவர்கள் நாங்கள் என்றும் உங்களுக்காக சேவை செய்ய தயாராக இருக்கின்றோம் "


என தனது உரையில் தெரிவித்தார் மேலும் இந்நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் முத்து முகம்மது மற்றும் நகர/பிரதேச சபை உறுப்பினர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்கள் தொடர்புஅதிகாரிகள் கட்சி உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் கிராம நிலத்தாரி போன்று இன்னும் பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது
Previous Post Next Post