Top News

வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று

2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 05.00 மணியளவில் இடம்பெறவுள்ளது. கடந்த மார்ச் மாதம் 5ம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீர 2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்தார். 

இதனையடுத்து 06 நாட்கள் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீது விவாதம் நடத்தப்பட்டு, கடந்த 12ம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

இதன்போது வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 119 பேர் வாக்களித்துடன், எதிராக 76 பேர் வாக்களித்திருந்தனர். 

இந்தநிலையில் இன்றையதினம் ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதுடன், கூட்டு எதிர்க்கட்சி மற்றும் ஜேவிபி ஆகியன எதிராக வாக்களிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் வரவு செலுவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி எவ்வித தீர்மானமும் இன்றி உள்ளது.

Previous Post Next Post