Top News

இலங்கையில் இஸ்லாம் வந்தது எப்படி?



இன்று இலங்கையில் பெளத்தர்கள் 70% மும் இந்துக்கள் 20% மும் முஸ்லிம்கள் 10% மும் உள்ளனர் .

எமது இலங்கை முஸ்லிம்களின் வரலாறு என்பது மிகவும் தொன்மை வாய்ந்தது . இது நாங்கள் அறிந்த உண்மை . ''லோனா தேவராஜ்'' என்ற பிரபலமான வரலாறு ஆசிரியர் கூறுகின்றர் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு 1000 வருடங்கள் தொன்மைவாய்ந்தது என்று கூறுகிறார் .


ஆனால் இன்று சில பெளத்த இனவாதிகள் இலங்கை முஸ்லிம்களுக்கென்று தனியான ஒரு வரலாறு இல்லை அவர்கள் வந்தான் வரத்தார்கள் என்று இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைப் புறக்கணிக்கின்றார்கள் .

உண்மை அவ்வாறல்ல இலங்கை முஸ்லிம்களின் வரலாறு 1000 வருடங்கள் தொன்மை வாய்ந்தது . கி.பி. 7 ம் நூற்றாண்டில் இலங்கையில் இஸ்லாம் இருந்ததுள்ளது . இதற்கான சான்றுகளும் ஆங்காங்கே எழுதப்பட்டுள்ளது .

இலங்கையில் அரேபியர்களின் தொடர்புகள் 
======================

பெளத்தர்களின் வரலற்றைக்கூறுகின்ற மகாவம்சத்தில் அநுராத புறத்தில் ஒரு மன்னர் யோனஸ் என்ற ஒரு வர்க்கத்தினருக்கு தங்குவதற்கு இடமழித்ததாகக் கூறுகின்றது .இதற்கு Wilheim Geigge , Srima kiribamuna . Lona Drwarag என்ற வரலாற்று ஆசிரியர்ஆசிரியர்கள் ,, அது அரேபியர்கள் என்று கூறுகின்றார்கள் .

கிரேக்கர்களின் பட்டுப்பாதையாக மத்திய தரைக்கடல் , சங்கடல் , இலங்கை காணப்பட்டது . பின்னர் றோமர்களும் அதன் பின்னர் அரேபியர்கள் வசமானது . இத்ன் பிரகாரம் கி.பி. 2 நூற்றாண்டில் அரபு வர்த்தக கப்பல்கள் இலங்கை கரையோரங்களை அன்மித்தது . இதற்கு ஆதாரமாக பிளினி , 3 ஒன் குறூட் மற்றும் 6 கொஸ்மஸ் கிரேக்க றோம வரலாற்றில் இலங்கையின் கரையோரங்களில் அரேபியர்கள் காணப்பட்டார்கள் என்று சொல்லப்படுகிறது .

இலங்கைக்கு வந்த வந்த அரேபியர்களில் அதிகமானவர்கள் எகிப்து மற்றும் யெமன் வர்த்தகர்கள் .

இலங்கை முஸ்லிம்கள் வரலாறு சம்பந்தமாக எழுதப்பட்ட சில நூல்கள் .
======================

01) 1888 ல் Sir பொண்ணம்பலம் ராமநாதனால் எழுதப்பட்ட நூல் 
( இலங்கை முஸ்லிம்கள் இனத்தால் தமிழர்கள் சமயத்தால் முஸ்லிம்கள் )

இந்தப் புத்தகத்தை விமர்சித்து 1907 இல் I.L.MA. Aessz எழுதிய புத்தகம் . 
( இலங்கை சோனகர் வரலாறு ஒரு திறனாய்வு )

02) 1926 ல் வான் சண்டேன் எழுதிய ( sonahar )

03) 1941 ல் Hilar எழுதிய ( History of muslim in srilanka )

04) 1951 ல் பரானி எழுதிய ( Arabs seefairint medival )

05) அரசரத்னம் ( தமிழ் ஆய்வாளர் ) 17 ம் நூற்றாண்டில் பெரிய தம்பி மரைக்கார் )

06) 1976 ல் K.W. குணவர்த்ன ( போத்துகேயர் காலத்தில் முஸ்லிம்கள் )

07) D.R Sukri எழுதிய ( Muslims of Srilanka )

08) M. Sameem எழுதிய (சிறுபான்மை சமூகத்தின் தொகுப்புகள் )

09) Kamil Asath எழுதிய ( british காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் )

10) வாம தேவன் எழுதிய ( The history of srilankan muslim )

11) Jameel sir எழுதிய ( இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரியங்கள் )

12) Mhsin எழுதிய (இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் )

13) பிரதீப் மதுரங்க அளுத்வத் என்பவர் எழுதிய ( இலங்கை முஸ்லிம்களின் கட்டிடக்கலை )

இவை அனைத்தும் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றி ஆங்காங்கே எழுதப்பட்ட நூல்கள் .

இது அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு புதிய நூலை நாங்கள் தொகுக்க வேண்டும் . அப்போதுதான் பெளத்தர்கள் மற்றும் தமிழர்கள் போன்று எங்களுக்கும் எமது பூரவீகத்தைக் காட்டும் ஒரு நூல் உள்ளது என்று நிமிர்த்தமாகச் சொல்லலாம் .
Previous Post Next Post