பொதுத் தேர்தலின்றி மீண்டும் பிரதமர் பதவியை ஒருபோதும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துளளார்.
தங்காலை கால்டன் வீட்டிற்கு வந்த விருந்தினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இந்த நாட்களில் ஆட்சி மாற்றம் தொடர்பில் இடம்பெறும் கலந்துரையாடல்கள் குறித்து ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகின்றது.
பிரதமர் பதவிகள் ஏற்றுக் கொள்வீர்களா என அங்கிருந்தவர்கள் மஹிந்தவிடம் வினவிய போது “ஐயோ கடவுளே எனக்கு வேண்டாம்” என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டமையினால் தனக்கு பாரிய மக்கள் கூட்டம் கிடைத்துள்ளதாகவும், பொதுத் தேர்தல் மீண்டும் பிரதமராகுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.