இலங்கையில், ஐ.எஸ்.ஐ.எஸ் நுழையாமல் இருக்க நடவடிக்கை : நிமல்

Ceylon Muslim
சர்வதேச பயங்கரவாத குழுக்கள் இலங்கையில் நுழைவதைத் தடுப்பதற்கு இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு நவீன தொழில்நுட்ப கருவிகளும் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

உலகில் இன்று ஐ.எஸ்.ஐ.எஸ். எனும் பயங்கரவாத குழுக்கள் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இக்குழு இலங்கையில் தலையிடாது பாதுகாக்க எமது பாதுகாப்புப் பிரினரை தயார்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 
6/grid1/Political
To Top