இலங்கை மின்சார சபை உற்பத்தி செய்யும் கட்டணத்தை விட குறைந்த விலைக்கே மிதக்கும் மின்உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்சாரம் கொள்வனவு செய்யப்படுவதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை சந்தித்த போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
அத்தோடு, நாளையில் இருந்து மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனவும் மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.அலகொன்று 25 ரூவா வீதம் 500 மெகாவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்யும் இயலுமை இருப்பதாக அமைச்சர் கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அதாவது எமது அமைச்சரவை ஒரு விடயத்தை கூறியது. மின்சாரத்தை துண்டிக்க முடியாது. அது தற்காலிகமாகவே இடம்பெற்றது. எதிர்வரும் 10 ஆம் திகதி மாலையில் இருந்து நாம் மின்சார துண்டிப்பை முழுமையாக நிறுத்துவோம். அதற்கு நிரந்த தீர்வொன்றை வழங்க நாம் திட்டமிட்டுள்ளோம். சில பகுதிகளில் தொடர்ந்தும் வீண்விரயம் இடம்பெறுகிறது.
இன்று நான் வரும்போதும் 10 வீதி விளக்குகள் எரிவதைக் கண்டேன். ஆகக்குறைந்தது இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது தெரிவதில்லை. அதேபோன்று வெசாக் பண்டிகைக்கும் பிரச்சினை இல்லை. முன்னைய வருடங்களை விட அதிக வெசாக் தோரணங்களை அமைக்க முடியும். தொடர்ந்து நாம் மின்சாரத்தை வழங்குவோம். ஒருபோதும் மின்கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்க மாட்டோம்என மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.