தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால், குமார வெல்கமவை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியில் நிறுத்துவது குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டால், சிறிலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அந்தக் கட்சியின் ஒரு பகுதியினர் கருதுகின்றனர்.
பொதுவேட்பாளராக குமார வெல்கமவை நிறுத்த வேண்டும் என்றுபொதுஜன பெரமுன தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.விரைவில் கூட்டு எதிரணி தலைவர்கள் இதுபற்றி சிறிலங்கா அதிபருடன் கலந்துரையாடவுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
அதேவேளை, குமார வெல்கமவும், ராஜபக்ச குடும்பத்தின் உறவினர் தான் எனவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.