மொஹமட் நையீம், மொஹமட் முபா ஆகிய மாகந்துரே மதுஷின் மேலுமிரு சகாக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்..

NEWS

டுபாயில் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக் கோஷ்டியின் தலைவருமான மாகந்துரே மதுஷின் மேலுமிரு சகாக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மொஹமட் நையீம், மொஹமட் முபா ஆகிய இருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். டுபாயிலிருந்து இன்றுக்காலை 5,04க்கு வந்த யு.எல்.-226 என்ற வி​மானத்திலேயே இவ்விருவரும் வருகைதந்தனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக, குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
6/grid1/Political
To Top