Top News

வடக்கு-கிழக்கில் சுகாதாரத் துறை பாரிய வளர்ச்சி! பைசல் காசிம் பெருமிதம்

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் சுகாதாரத் துறை என்றுமில்லாதவாறு பாரிய அபிவிருத்தி கண்டு வருகிறது என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு-செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்;

நாட்டின் ஒவ்வொரு துறையையும் கட்டியெழுப்பும் நோக்கில் வரவு-செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு அமைச்சுக்கும் கணிசமான தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் நான் இராஜாங்க அமைச்சராக இருக்கும் சுகாதாரத் துறையும் இந்தப் பாரிய அபிவிருத்தி வட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு-கிழக்கு மாகாணங்களில் சுகாதாரத் துறையைக் கட்டியெழுப்புவதற்காக இதுவரை மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளவிருக்கின்ற சேவைகள் சிலவற்றையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கிழக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால் அங்குள்ள வைத்தியசாலைகள் அனைத்திலும் நிலவுகின்ற குறைபாடுகளை ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்துகொண்டு அவற்றை அபிவிருத்தி செய்து வருகின்றோம்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பல அபிவிருத்திப் பணிகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.எதிர்காலத்தில் அங்கு நிர்மாணிக்கப்படவுள்ள சத்திர சிகிச்சை பிரிவு கட்டடத்துக்கு வரவு-செலவு திட்டம் நிறைவேறியதும் நிதி ஒதுக்கப்படும்.

அதேபோல்,அந்த வைத்தியசாலையில் clinical complex நிர்மாணிப்பதற்கும் நிதி ஒதுக்கவுள்ளோம் .இந்த வருடத்துக்குள் இந்தக் கட்டடத்தை நிர்மாணித்து முடிப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம்.அந்த வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கதிரியிக்கப் பிரிவு கடந்த வாரம்தான் திறந்து வைக்கப்பட்டது.

சொறிக்கல்முனை பிரதேச வைத்தியசாலையில் 35 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சகல வசதிகளையும்கொண்ட நவீன ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையம் மக்களின் பாவனைக்காக இம்மாதம் 18ஆம் திகதி கையளிக்கப்பட்டது.எதிர்காலத்தில் அங்கு மேலும் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும்.ஆளணி பிரச்சினைகளும் தீர்க்கப்படும்.

உலக வங்கியின் நிதி உதவியில் தொற்ற நோய்யைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் ஆரம்ப வைத்திய பாரமரிப்பு வேலைத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.இதற்காக 16 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.அதனூடாக,வைத்திய ஆய்வுகூடம்,கதிர் இயக்கப் பிரிவு மற்றும் அவற்றுடன் இணைந்ததாக மேலும் பல வைத்திய வசதிகளும் ஒலுவில் வைத்தியசாலைக்கு வழங்கப்படும்.

அங்கு 2 மாடிக் கட்டடம் ஒன்றும் அமைக்கப்படும்.அத்தோடு,வைத்தியசாலைக்கு நான் ஒதுக்கீடு செய்துள்ள 20 இலட்சம் ரூபாய் செலவில் சுற்று மதில் அமைக்கப்படுகிறது.

மூவினங்களும் பயன்பெறும் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் 56.59 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் குருதி சுத்திகரிப்பு பிரிவு ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.நான் அமைச்சராக ஆனது முதல் இந்த வைத்தியசாலையின் தேவைக்காக 75 மில்லியன் ரூபா நிதியை செலவழித்துள்ளேன்.கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அது ஒதுக்கப்பட்டுள்ளது.

01-CCTV system - 1.5mn - 2016
02-Air-condition system -5Mn - 2016
03-Construction dialysis unit with equipment ( 10Mn building+ equipment’s 46.590Mn) -56.59Mn (2017)
04-Medical equipment 2016 – 5Mn (under HDU) 2017
05-Renovation works 4Mn - 2018
06-Medical equipment’s – fully automated analyser 2.185Mn
07-Total : 69.275Mn

மேலும் அந்த வைத்தியசாலைக்கு கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் வருகை தரும் வைத்திய நிபுணர் [ visiting physician] ஒருவரும் குழந்தை நல வைத்தியர் [pediatrician] ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் 34 மில்லியன் ரூபா செலவில் நோயாளர் விடுதி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.மேலும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அந்த வைத்தியசாலைக்கு நிதி ஒதுக்கி இருக்கின்றோம்.

01.Construction dialysis unit with equipment ( 10Mn building+ equipment’s 46.590Mn) -56.59Mn (2017)
02.Medical ward -32.5Mn + furniture 3.6Mn--- 38.6Mn (2017-2018)
03.Renovation admiration building & surgical award 4Mn (2018)
04.Renovation maternity ward 5Mn (2018)
05.CCTV system - 2.767Mn
06.Air-condition system -2.479Mn
07.Operation theatre table -1.5Mn
08.Medical equipment’s – fully automated analyser 2.185Mn


Total : 113.121Mn


35 மில்லியன் ரூபா செலவில் மத்தியமுகாம் வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆண், பெண் மருத்துவ விடுதி தொகுதி இம்மாதம் 18ஆம் திகதி மக்களின் பாவனைக்கு விடப்பட்டது. 


நிந்தவூரில் சிறுவர் மற்றும் மகப்பேற்று வைத்தியசாலை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆயுர்வேத வைத்தியசாலையை அண்மையில் மக்களின் பாவனைக்கு கையளித்தோம்.அங்கு இன்னும் பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவுள்ளன.நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நான்கு வைத்திய பிரிவுகள் 20.01.2019 அன்று மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.

5 கோடி ரூபா செலவில் இறக்காமத்தில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.அது மிகவிரைவில் பூர்த்தி செய்யப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்படும்.

மீறாவோடை பிரதேச வைத்தியசாலையில் 24 கோடி ரூபா செலவில் மூன்று மாடிக் கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக நடவடிக்கை எடுத்துள்ளோம்.முதல் கட்டமாக 10 கோடி ரூபாவை இந்த வரவு-செலவு திட்டத்தின் ஊடாக ஒதுக்கியுள்ளோம்.அந்த வைத்திசாலையின் வைத்தியர்களின் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த மாதம் புதிதாக வைத்தியர் ஒருவரையும் நியமித்துள்ளோம்.அதேபோல்,அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்றையும் வழங்கியுள்ளோம்.

இனப்பாகுபாடு இன்றி அணைத்து வைத்தியசாலைகளும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக இதுவரை ஒரு கோடி ரூபா நிதி என்னால் வழங்கப்பட்டுள்ளது.அந்த வைத்தியசாலைக்கு விரைவில் அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்றையும் வழங்கவுள்ளோம்.காரைதீவு ஆதார வைத்தியசாலைக்கு சுற்று மதில் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

நாடு பூராவும் உள்ள வைத்தியசாலைகளுக்கு 152 அம்பியூலன்ஸ் வாகனங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.அவற்றுள் கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11 அம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டன.திருகோணமலை,மீறாவோடை,நிந்தவூர்,இறக்காமம்,அம்பாறை,மட்டக்களப்பு,பாணம,ஏறாவூர்,அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் போன்ற இடங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கே இவை பகிர்ந்தளிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கதிரவெளி,வாழைச்சேனை,சந்திவெளி மற்றும் காத்தான்குடி ஆகிய வைத்தியசாலைகளுக்கும் திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை,கிண்ணியா,சேருநுவர மற்றும் ஈச்சிலம்பற்று ஆகிய வைத்தியசாலைகளுக்கும் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில்,சம்மாந்துறை மற்றும் மத்திய முகாம் வைத்தியசாலைகளுக்கும் விரைவில் அம்பியூலன்ஸ் வாகனங்களை வழங்கவுள்ளோம்

கிழக்கு மாகாணத்தில் பொது மற்றும் போதனா வைத்தியசாலைகள் இல்லாத குறைகளை நிவர்த்தி செய்வதற்காக இனி ஏனைய வைத்தியசாலைகளில் விசேட வைத்திய பிரிவுகள் தொடங்கப்படும்.

கிழக்கு மக்களின் நலனையும் வைத்தியசாலைகளின் பௌதீக தேவைகளையும் கவனத்தில் கொண்டு கண்,காது, சிறுவர், மகளிர் மகப்பேற்று, அறுவை சிகிச்சை உள்ளிட்ட பிரிவுகளை ஒவ்வொரு வைத்தியசாலைகளிலும் உருவாக்கி சகல பிரதேசத்திலும் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முயற்சியினை முன்னெடுத்து வருகின்றோம்.

நான் மேலே குறிப்பிட்டுள்ளவை கிழக்கு மாகாண சுகாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு நாம் செய்த சேவைகளுள் சிலவற்றை மாத்திரம்தான்.குறிப்பிடுவதற்கு இன்னும் இருக்கின்றன.நேரம் போதாமை காரணமாக சிலவற்றை மாத்திரமே குறிப்பிட்டுள்ளேன்.

வடக்கை எடுத்துக்கொண்டால் மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவுகின்ற பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த மாவட்டத்தில் சுகாதாரத் துறையை மேம்படுத்துவது தொடர்பில் மன்னார் மாவட்ட வைத்திய அதிகாரிகளுக்கும் எனக்கும் இடையில் 06.02.2019 அன்று சுகாதார அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அதன்படி,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 5 கோடி ரூபா பெறுமதியான ct scanner இயந்திரம்,தேவையான கருவிகள் மற்றும் ct scanner க்கான ஒரு கோடி செலவிலான கட்டடம் ஆகியவற்றை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மேலும் அந்த வைத்தியசாலைகளில் வைத்திய ஆலோசகர்களின் எண்ணிக்கையை 23 இல் இருந்து 34 ஆக அதிகரிப்பதற்கும் மகப்பேற்று வைத்திய நிபுணர்களை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிலாவத்துறை வைத்தியசாலைக்கு வைத்தியர்,தாதியர் மற்றும் வைத்திய ஆலோசகர் விடுதியை நிர்மாணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அரச கட்டடத் திணைக்கள அதிகாரிகள் விரைவில் அங்கு சென்று இது தொடர்பில் மேலதிக செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளனர்.


அதேபோல்,நானாட்டான்,அடம்பன் உள்ளிட்ட மேலும் பல வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட தாதியர் விடுதி மற்றும் அரச ஒசுசல கட்டடம் அண்மையில் மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டன.மேலும்,வைத்திய புனர்வாழ்வு நிலையம் ஒன்றை அங்கு அமைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.அதற்கான அடிக்கல் 16.08.2018 நடப்பட்டது.நாம் பல சிரமங்களுக்கு மத்தியில்தான் எமது நாட்டின் வைத்தியத் துறையை முன்னேற்றுவதற்கு பல நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம்.

நாடுபூராகவும் உள்ள வைத்தியசாலைகளில் பல குறைபாடுகள் உள்ளன.வைத்தியர்களுக்கான தட்டுப்பாடு உள்ளது.ஒரு வருடத்துக்கு நாம் 1200 வைத்தியர்களை உருவாக்குகின்றோம்.அவற்றுள் 200 பேர் எங்களை விட்டுச் செல்கின்றனர்.

இவர்கள் தனியார் வைத்தியசாலைகளுக்கு அல்லது வெளிநாடுகளுக்குச் சென்று விடுகின்றனர்.மீதியாகவுள்ள ஆயிரம் வைத்தியர்களை நாடுபூராகவும் உள்ள வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கின்றோம்.இன்னும் 150 வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களை நியமிக்க முடியாமல் உள்ளோம்.

அதேபோல்,2200 வைத்திய ஆலோசகர்கள் சுகாதார அமைச்சின்கீழ் வேலை செய்கின்றனர்.அதிகமான ஆலோசர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.

இவ்வாறான குறைபாடுகளுடனும் சவால்களுடனும்தான் நாம் இந்த சுகாதார சேவையை சிறந்த முறையில் வழங்கி வருகின்றோம்.இன்னும் இரண்டாயிரம் இருதய சத்திர சிகிச்சைகள் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.

இவ்வாறான குறைபாடுகளின் மத்தியில் எமது வைத்தியர்களும் தாதியர்களும் சிறந்த சேவையை வழங்குவதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.அதற்காக அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ராஜித சேனாரத்ன அவர்கள் சுகாதார அமைச்சராக வந்ததன் பின்தான் வைத்தியர்களின் சம்பளத்தை அதிகரித்துக் கொடுத்துள்ளார்.எல்லா வைத்தியர்களுடனும் பேசி பிரச்சினையைத் தீர்க்கின்றார்.

அவர் எல்லா மாவட்டங்களையும் சமமாகப் பார்த்து அபிவிருத்தி செய்கின்றார்.அவர் இனவாதமற்ற நீதியான மனிதர்.நான் 14 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றேன்.எனது இந்தக் காலத்துக்குள் பல சுகாதார அமைச்சர்களைக் கண்டுவிட்டேன்.அவர்கள் அனைவரும் அவர்களின் மாவட்டங்களை மாத்திரம் அபிவிருத்தி செய்பவர்களாகவே இருந்திருக்கின்றனர்.அவர்கள் தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்வர்.ஆனால்,ராஜித மட்டும்தான் முழு நாட்டிலுமுள்ள வைத்தியசாலைகளையும் சமமாகப் பார்த்து அபிவிருத்தி செய்கிறார்.

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் காணப்படுகின்ற அதி நவீன முறைமையைப் பயன்படுத்தி எமது நாட்டின் சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் எமது அமைச்சர் ராஜித சேனாரத்ன பாடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.புதிதாக வருகின்ற நவீன வைத்திய கருவிகள் அனைத்தையும் இறக்குமதி செய்து மக்கள் பாவனைக்கு விடுகின்றார்.

அரசியல் இலாபம் கருதாது நாட்டின் நன்மை கருதி ராஜிதவின் இந்த முயற்சி வெற்றி பெறுவதற்கு நாம் அனைவரும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஆதரவு வழங்க வேண்டும் .என்றார்.

[ஊடகப் பிரிவு]
Previous Post Next Post