மாதம்பை அரபுக் கல்லூரியில் கடமையாற்றிய எகிப்தினருக்கு விளக்கமறியல்

Ceylon Muslim
மாதம்பை அரபுக் கல்லூரியில் கடமையாற்றிய எகிப்து நாட்டு ஆசிரியரை நாளை (26) வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று (25) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவர் தற்பொழுது நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அக்கல்லூரியின் நிருவாகி  தெரிவித்தார்.

வீசா நிறைவடைந்த பின்னர் நாட்டில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த எகிப்து நாட்டு ஆசிரியர் மாதம்பை பொலிஸாரினால் நேற்று (24) கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
6/grid1/Political
To Top