ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை நாக விகாரை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநாகர சபை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை செயலக காரியாலயம் ஆகியன ஒன்றிணைந்து வருடந்தோறும் நடத்திவரும் வெசாக் பண்டிகை தின கொண்டாட்டத்தை இம்மறை இரத்துசெய்துள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தaனபுர கோட்டை நாக விகாரையின் தலைவர், பண்டிதர் தர்ஷனபதி பூஜிய வதுருவில சிறி சுஜாத தெரிவித்துள்ளார்.
குறித்த விகாரையில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்துரையாற்றுகையில், கோட்டை சந்தியிலிருந்து ஜூபிலி பகுதி வரையில் முன்னெடுக்கப்படும் வெசாக் தின நிகழ்வுகள் அனைத்தும் தற்பொழுது கைவிடப்பட்டுள்ளதென்றும், விசேட ஆன்மீக உரைகள் மற்றும் போதனைகள் மட்டுமே இடம்பெறுமென்றும் அவர் மேலும் கூறினார்.
அத்துடன் நாட்டில் கடந்த சில நாள்களுக்க முன்னர் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களால் நாடு தற்சமயம் அசாதாரண நிலையில் இருந்துவருவதானாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.