நீர்கொழும்பில் சற்றுமுன் பாகிஸ்தான் பிரஜைகள் ஆறு பேர் கைது

Ceylon Muslim
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்நிவுஸ் வீதியில் மற்றும் பெரியமுல்லை பகுதியில் சட்டவிரோதமான முறையில் இந்நாட்டில் தங்கியிருந்த பாகிஸ்தான் நாட்டு பிரஜைகள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நீர்கொழும்பு பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர்கள் நேற்று ()22 கைது செய்யப்பட்டுள்ளனர். 

18, 23, 24 மற்றும் 25 வயதுடைய பாகிஸ்தான் நாட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

6/grid1/Political
To Top