நாட்டில் சமய நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடியதாக ஒரு சாரார் குறுகிய கருத்து வேறுபாடுகளை தூண்டுகின்ற விதத்தில் இனவாதத்தை பரப்பி வருவது கவலைக்குரியது எனக் குறிப்பிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஆன்மீகத்தில் அதிகம் கவனம் செலுத்துவதுடன்; சகிப்புத்; தன்மையும்அவசியமானது என்றார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் பலாபத்தலவில் புதன்கிழமை (03) யாத்திரைகள் ஓய்வெடுக்கும் விடுதியான இரண்டு மாடி கட்டடத்தைமக்கள் பாவனைக்கு திறந்து வைக்கும் நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு உரையாற்றுகையில் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
எனது அமைச்சினூடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்ஆலோசித்தபோது இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எ.எ.விஜயதுங்க இந்த பிரதேசத்தில் யாத்திரிகர்களுக்கானஓய்வு எடுக்கும் விடுதியொன்றை அமைக்க வேண்டுமென்று வித்தியாசமான ஆலோசனையொன்றை எனக்கு வழங்கினார்.
இந்த நாட்டில் சிவனொளிபாத மலை என்பது சமய நல்லிணக்கத்தின் அடையாள சின்னமாகக் கருதப்படுகின்றது. அவ்வாறானதலமொன்றிற்கு பிரவேசிக்கக் கூடியதொர் இடத்தில் இத்தகைய யாத்திரிகர்களுக்கான ஒரு விடுதி அமையப் பெறுவதுஅவசியமானதாகும்.
இந்த நாட்டில் சுதந்திரம் கிடைத்ததன் பின்னர், நாட்டின் தேசிய கொடியை தயாரிக்கும் போது பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன.அவற்றில் ஒன்று தான் சிவனொளிபாத மலையை தேசியக் கொடியில் இடம்பெறச் செய்வது என்பதாகும். அது தொடர்பாக நீண்டவிவாதங்கள் கூட நடந்தன.
தேசிய கொடியை நாங்கள் அனைவரும் மதிக்கின்றோம். ஏற்றுக் கொள்கின்றோம். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனாலும்,இந்த மலையை பற்றி வௌ;வேறு சமயங்களை பின்பற்றுபவர்கள் மத்தியில் ஒரு வித விசுவாசம் இருந்து வருகின்றது.
பௌத்தர்கள்;, இந்த மலையில் புத்த பெருமான் தடம் பதித்ததாக நம்புகின்றார்கள். அவ்வாறே முதல் மனிதர் ஆதம் நபி, சுவர்க்கத்தில் தவறிழைத்ததன் காரணமாக அங்கிருந்து உலகிற்கு அனுப்பப்பட்ட போது பாவா ஆதம் மலையில் கால் பதித்ததாக முஸ்லிம்களில்சிலர் நம்புகின்றனர்.
அவ்வாறே கிறிஸ்த்தவர்களும் ஆதாம் என்ற இறை தூதர் இங்கு வந்திறங்கியதாக கூறுகின்றனர்.
அவ்வாறே இந்துக்களும் சிவ பெருமானை சம்பந்தப்படுத்தி இது பற்றி கூறி வருகின்றனர்.
அண்மையில் இரத்தினபுரிக்குச் சென்றிருந்த போது அங்குள்ள சமன் தேவாலயம் என்ற வணக்கஸ்த்தலம் முற்றிலும்புனரமைக்கப்பட்டிருந்ததை கண்டேன். நான் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அந்தப் பகுதிக்கு சென்றிருந்த போது தூர்ந்துவிடக் கூடியநிலையில் காட்சியளித்த அந்த சமன் தேவாலயம் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்கவின் 90மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில்புனரமைக்கப்பட்டிருக்கின்றது.எங்களுடைய அரசாங்கம் முன்னெப்போதையும் விட, கூடுதல் கரிசினை எடுத்து எல்லா சமயங்களுக்கும் உரியவணக்கஸ்த்தலங்களை அபிவிருத்தி செய்து வருகின்றது. சிவனொளிபாத மலைக்கு செல்லும் பக்தர்களின் தேவையை கருத்திற்கொண்டு, இந்த யாத்திரைகள் ஓய்வெடுக்கும் விடுதியை நிர்மாணித்திருக்கின்றோம்.எங்கள் நாட்டில் சமய நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடிய விதத்திலே ஒரு சாரார் குறுகிய கருத்து வேறுபாடுகளைதூண்டுகின்ற விதத்தில் இனவாதத்தை பரப்பி வருவது கவலைக்குரியது.
கடந்த ஆட்சி காலத்தில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மக்கள் மத்தியில் வேறுபாடுகளை விதைக்கும்அமைப்புக்கள் தோன்றி, தேவையற்ற அட்டகாசங்களில் ஈடுபட்டன.இவ்வாறான தீவிரவாத குழுக்கள் சகல சமயங்களை பின்பற்றுவோர் மத்தியிலும் செயற்படாமல் தடுப்பதற்கு சமயத் தலைவர்கள்மிகவும் பொறுப்புணர்ச்சியுடனும், கண்காணிப்புடனும் இருந்து அவர்களை நேர்வழிப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துவதுமிகவும் அவசியமாகும்.
எல்லா சமயங்களை அனுஷடிப்பவர்கள் மத்தியிலும் தீவிரவாத சிந்தனை போக்குள்ளவர்கள் இருக்கத்;தான் செய்கின்றார்கள். சிறியசம்பவங்களை காரணமாக வைத்து அசம்பாவிதங்கள் நடக்கின்றன. ஆன்மீகத்தில் நாங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.அத்துடன் சகிப்புத் தன்மையும் இன்றியமையாதது.
எங்கள் அமைச்சினூடாக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை சகல மக்களும் பயன்படக் கூடிய விதத்தில் நாடளாவிய ரீதியில்முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.இந்நிகழ்வில் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எ.எ.விஜயதுங்க, இரத்தினபுரி மாவட்ட அரசாங்க அதிபர் மாலின்லொகுபொத்கம, அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சி.எம்.நபீல், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்
பீ.தாஜுதீன் ஆகியோர் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.