கோட்டபய மீதான வழக்கு, பிரஜாவுரிமையை நீக்க பிரச்சினையாகாது - ஜி.எல். பீரிஸ்

Ceylon Muslim
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபய ராஜபக்ஸவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் வழக்கானது, அவரது அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக் கொள்வதற்கு தடையாக அமையாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் தொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு நீதிமன்றத்தைப் பயன்படுத்துவது தவறானது எனவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று கொழும்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளா். (மு)
6/grid1/Political
To Top