நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டென் அந்நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய பொருட்களுக்கு பணஉதவி செய்து மீண்டும் அந்நாட்டு மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளார்.மார்ச் 15 ஆம் திகதி நியூசிலாந்தில் இருந்த க்ரைஸ்ட் சர்ச் மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 50 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நடந்த அன்று ' கருப்பு நாள்" எனப் பதிவிட்டு தன் வருத்தத்தைப் பதிவு செய்தார் நியூசிலாந்து பிரதமர். மேலும் இறந்துபோனவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறும்போது, தானே ஹிஜாப் அணிந்து சென்றது உலக அளவில் பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் பெற்றது.
சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கி விட்டு பணத்தை கொடுக்க முடியாமல் தவித்த பெண்மணிக்காக நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிண்டாவே பணத்தை கொடுத்து உதவி செய்துள்ளார்.
இந்த நிகழ்வு குறித்து வெளியே தெரியவந்ததையடுத்து, அவர் ஒரு தாய், தனது இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். தனது பணத்தினை வீட்டில் வைத்துவிட்ட வந்த அவருக்கு உதவி செய்தேன் என பதிலளித்துள்ளார்.
இவரின் இந்த செயல் அந்நாட்டு மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.