மின்வெட்டுக்குப் பின்னால் யாரும் அறியாத இரகசியம் இருக்கின்றது !

Ceylon Muslim
மின்சார நெருக்கடிக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார். 

நீதிமன்ற வளாகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். 

மின்வெட்டுக்குப் பின்னால் யாரும் அறியாத இரகசியம் ஒன்று இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுிகளை பார்க்கும் போது சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறினார். 

எதிர்வரும் தேர்தலுக்கு தேவையான பணத்தை திரட்டிக் கொள்வதற்காக இவ்வாறு மின் வெட்டு அமுல்படுத்தப்படுகிறதா என்று சந்தேகம் இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

6/grid1/Political
To Top