சிறிலங்கா தலைநகர் கொழும்பிலும் வெளிஇடங்களிலும் இன்றைய தினம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்ற இடங்கள் மற்றும் அந்த சம்பவங்களில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகள் அமைந்துள்ள பகுதிகளிலல் ஒன்று திரள்வதை பொது மக்கள் தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இன்றைய தினம் ஒரே நேரத்தில் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணி தொடர்பில் இன்னும் தௌpவில்லாத நிலையில் மக்கள் ஒன்று திரளும் இடங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாவே மக்கள் அந்த இடங்களில் திரள வேண்டாம் எனபொலிசார் அறிவூறுத்தியூள்ளனர்.
அத்துடன் முடிந்தவரையில் மிக மிக அத்தியவசிய தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியேறுவதையும் தவிர்த்துக்கொள்ளுமாறும் பொலிசார் மக்களிடம் கேட்க்கொண்டுள்ளனர்.
இன்றைய தினம் இடம்பெற்ற தாக்குதல்களில் 100 மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதுடன் 250 க்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.