Top News

Royal Institute சர்வதேச பாடசாலையை இடித்து தரைமட்டமாக்க உத்தரவு



Royal Institute சர்வதேச பாடசாலையின் நுகேகொடை கிளையை இடித்து தரைமட்டமாக்குவதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த சர்வதேச பாடசாலை அமைந்துள்ள இடத்தினை சூழவுள்ள குடியிருப்பாளர்களினால் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் தாக்கல் செய்யப்பட்ட 16 மனுக்களின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மனுக்களை ஆராய்ந்து பார்த்த நீதிமன்றம் நுகேகொடை செப்பல் வீதியில் அமைந்துள்ளது Royal Institute சர்வதேச பாடசாலை கட்டடம் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதனை கண்டறிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து குறித்த தனியார் பாடசாலை கட்டடத்தை 3 மாதங்களுக்குள் இடித்து தரைமட்டமாக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை பாடசாலை நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளது.

Royal Institute தனியார் பாடசாலையில் தலைமைப் பாடசாலை ஹெவலொக் வீதி கொழும்பு 05 இல் அமைந்துள்ளதுடன் இதன் ஏனைய கிளைகள் நுகேகொடை, மஹரகம மற்றும் கம்பஹாவில் அமைந்துள்ளதுடன் அந்த பாடசாலைகளில் இருபாலரும் கல்விகற்பதனுடன் மாயா அவனியூவில் அமைந்துள்ள பாடசாலை பெண்கள் பாடசாலையாகவும் அமைந்துள்ளது.
Previous Post Next Post