மினுவாங்கொட பகுதியில் அமைந்திருந்த, இலங்கையின் மிகப்பெரும் பாஸ்தா உற்பத்தி தொழிற்சாலை குண்டர்களினால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்சாலையில் 70 சதவீதமான ஊழியர்கள் சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திங்கட்கிழமை இரவு தொழிற்சாலையை சுமார் 200 குண்டர்கள் தாக்க ஆரம்பித்துள்ளனர். தமது தொழிற்சாலை தாக்கப்படும் போது, தொழிற்சாலை முகாமைத்துவம் உடனடியாக அதனை பொலிசாருக்கு அறியப்படுத்தியுள்ளனர். எனினும் 200 குண்டர்களை கட்டுப்படுத்த சுமார் பொலிசாரே வருகை தந்துள்ளனர். இதன்போது ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தொழிற்சாலை முழுவதுமாக அழிந்துவிட்டது, எதுவும் மீட்கப்படவில்லை. இத்தாக்குதலின் போது ஏழு ஊழியர்கள் அந்த தொழிற்சாலைக்குள் இருந்தனர், ஆனால் இப்பொழுது அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்,வைர பாஸ்தா பெரும்பான்மை சிங்களவர்களுடன், அனைத்து மதங்களுடனும் 30 ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது,
இந்த தாக்குதல் சம்பவத்திற்காக நாங்கள், சிங்கள மக்களை நாங்கள் கண்டிக்கவில்லை, இந்த அதிருப்தி நடவடிக்கையை செய்த குண்டர்களையே கண்டிப்பதாக தொழிற்சாலை நிர்வாகம் கூறியுள்ளது.
அத்துடன் இச்சம்பவத்தினால் தாங்கள் விரக்தியடைந்துள்ளதாகவும், முக்கிய ஊடகங்கள் எதுவும் இங்கு நடப்பதில் ஆர்வத்தை காட்டவில்லை எனவும் தொழிற்சாலை நிர்வாகம் கவலை வெளியிட்டுள்ளது.