Top News

27பள்ளிவாசல்களை தாக்கிய இனவாதிகள் - விபரம் 27 Muslim's Mosques Attacks in Srilanka



சில தினங்­க­ளாக முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் குரு­நாகல், புத்­தளம் மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களில் 27 பள்­ளி­வா­சல்­களும் ஒரு அரபுக் கல்­லூ­ரியும் தாக்­கப்­பட்டு சேதங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன.

தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளான பள்­ளி­வா­சலின் புள்ளி விப­ரங்­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் திரட்­டி­யுள்­ளது.

குரு­நாகல் மாவட்­டத்தில் 23 பள்­ளி­வா­சல்­களும், ஒரு அர­புக்­கல்­லூ­ரியும் புத்­தளம் மாவட்­டத்தில் 3 பள்­ளி­வா­சல்­களும் கம்­பஹா மாவட்­டத்தில் ஒரு பள்­ளி­வா­சலும் தாக்­கப்­பட்­டுள்­ளன. குரு­நாகல் மாவட்­டத்தைச் சேர்ந்த பள்­ளி­வா­சல்கள் பல­வற்­றுக்கு பலத்த சேதம் விளை­விக்­கப்­பட்­டுள்­ளது. பல பள்­ளி­வா­சல்­களில் குர்ஆன் பிர­திகள் எரிக்­கப்­பட்­டுள்­ளன.

குரு­நாகல் மாவட்­டத்தில் தாக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்கள்

*மஸ்­ஜிதுல் ஹுதா– கொட்­டாம்­பிட்­டிய
* மஸ்­ஜிதுல் லுஹ்லு– மல்­வத்த வீதி, கொட்­டாம்­பிட்­டிய
*மஸ்­ஜிதுல் தாருஸ்­ஸலாம்– நிக்­க­பிட்­டிய
*மஸ்­ஜிதுல் அப்ரார்– மடிகே, அனுக்­கென
*-மஸ்­ஜிதுல் ஆலியா– பூவெல்ல
*மஸ்­ஜிதுல் நூர் –போகொல்ல பாதை, ஹெடி­பொல
*மொஹிதீன் ஜும்ஆ பள்­ளி­வாசல்– இஹல கினி­யம – வீர­பொக்­குன
*அப்ரார் தக்­கியா –இஹல கினி­யம
*ஆயிஷா தக்­கியா– இஹல கினி­யம
*மஸ்­ஜிதுல் ஜாமிஆ– ஹொரம்­பாவ
*மஸ்­ஜிதுல் அக்ஸா தக்­கியா– கரன்­தி­பொல
*ஹம்­மா­லியா தக்­கி­யா–­பொன்­கொல்ல –பண்­டார கொஸ்­வத்த
*பிர்ருல் வாலிதைன் தக்­கியா– செம்­பேவ சுனந்­த­புர
*மஸ்­ஜிதுல் இஸ்லாம் –வீதி­ய­வெல –நாகொல்­லா­கொட
*ஜமா­லியா அரபுக் கல்­லூரி– கொட்­டம்­பிட்­டிய
*தோர­கொட்­டுவ ஜும்ஆ பள்­ளி­வாசல்– கொன்­னாவ– தோர­கொட்­டுவ
*சுவைக் தக்­கியா– கொன்­னாவ
*தக்­கியா – பென்­னலி கட­வெர –மொர­கோன்ன
*கைராத் ஜும்ஆ பள்­ளி­வாசல்– யாய­வத்த –கிரிந்­த­வெவ
*ஹசனாத் தக்­கியா –கல­பிட்­டி­ய­கம– நிக்­க­வ­ரட்­டிய
*நிக்­க­வ­ரட்­டிய ஜும்ஆ பள்­ளி­வாசல் –நிக்­க­வ­ரட்­டிய
*பென­டிக்­வத்த தக்­கியா– எஹத்­த­முல்ல– நாகொல்­லா­கொட
*மாபா­கம தக்­கியா –பரம்­பொல– ஹல்­மில்­லா­வெவ
*மொஹிதீன் ஜும்ஆ பள்­ளி­வாசல் –அச­ன­கொட்­டுவ –குறத்­தி­ஹேன
புத்­தளம் மாவட்டத்தில் தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல்கள்
*மஸ்ஜிதுன் நூர் –மைகுளம், சிலாபம்
*நூர்வீதி ஜும்ஆ மஸ்ஜித்– புத்தளம் வீதி, சிலாபம்
*மலாய் பள்ளிவாசல்– தர்காமாவத்தை, சிலாபம்

கம்பஹா மாவட்டம்

*மினுவங்கொட ஜும்ஆ பள்ளிவாசல்
Previous Post Next Post