ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களையடுத்து தனது பதவிக்காலத்தில் பணியாற்றிய முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து தற்போதைய நிலவரம் குறித்து அறிக்கை கோரியிருந்தார் மஹிந்த ராஜபக்ச.
இந்நிலையில், தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும், உளவுத்துறையை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் குறித்த முன்னாள் அதிகாரிகள் அறிக்கை வழங்கியுள்ளனர்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்க போன்றே அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கும் புனர்வாழ்வளிக்கும் திட்டம் அவசியம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.