Top News

பயங்கரவாத விசாரணைப் பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாற்றம்..!



உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. 

சேவையின் அவசியம் கருதி பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்கியுள்ளதுடன், பின்னர் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் அந்தப் பிரிவை அவருக்கு கீழ் கொண்டு வரப்பட்டது.
Previous Post Next Post