பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சர்மிளா கோனவிலவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு முன்னதாக விசாரணைக்கு வந்த போது, வழக்கில் சாட்சியாக முன்வைக்கப்பட்டுள்ள ஆவணங்களின் மூலப் பிரதிகள் தாக்கல் செய்யப்படாததால் அதனை விசாரணை செய்ய மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி அடிப்படை ஆட்சேபனை வௌியிட்டார்.
அதன்படி அந்த ஆட்சேபனையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.