திட்டமிடப்பட்ட குழுவொன்றினுடைய பள்ளிவாசல்கள் மற்றும் வியாபார நிலையங்கள் மீதான தாக்குதலினால் 900 மில்லியனிற்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி குறிப்பிட்டார்.
குருநாகல் மாவட்டத்திலுள்ள பாதிக்கப்பட்ட குளியாப்பிட்டிய, கொட்டம்பிட்டிய, ஹெட்டிபொல மற்றும் கின்னியமா போன்ற பிரதேசங்களிற்கான விஜயமொன்றை கடந்த திங்கட்கிழமை மேற் கொண்ட போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போது ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
பாதிப்படைந்த குடும்பங்களுடன் பேசுகையில் இனந் தெரியாத குழுவினால் நன்றாகத் திட்டமிடப்பட்டு முஸ்லிம்களின் உடைமைகள் மற்றும் அவர்களின் வணக்கஸ்தலங்களுக்கு பலத்த சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக கூறியதுடன் இது வருந்தப்படத்தக்க ஒரு விடயம் எனவும் இதனால் தான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறினார்.
இச் சம்பவங்களுடன் தொடர்புடையோருக்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தகுந்த தண்டனைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டார். இக்கலவரங்களால் பாதிப்புற்றோருக்கு தன்னுடைய வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு இவ் இழப்பீடுகள் அரசாங்கத்தினால் மீள்நிரப்பீடு செய்யப்படுமெனவும் குறிப்பிட்டார்.
இச் சம்பவமானது புனித ரம்ழான் மாதத்தில் முஸ்லிம்கள் இரவில் நிறைவேண்டிய “தாரவீஹ்” கூட்டுப்பிரார்த்தனையைக் கூட நிறைவேற்ற முடியாத நிலைக்கு ஆக்கிவிட்டதாக குறிப்பிட்டார்.