மன்னார் கல்லாறுப் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு அருகில் சில வெடிபொருட்கள் இருக்கலாம் என இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலுக்கு அமைவாகக் குறித்த வீட்டினை இன்று காலை சோதனை செய்தபொழுது குறித்த வீட்டிலிருந்து 2 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வீட்டின் வேலிப்பகுதியில் கடதாசிப் பெட்டி ஒன்றிலிருந்து தமிழன் குண்டு எனச் சொல்லப்படுகின்ற விடுதலைப்புலிகளின் தயாரிப்புக் குண்டு ஒன்றும் ஆர்.பி.யி குண்டு ஒன்றுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
குறித்த குண்டை வெடிக்கவைப்பதற்கு தர்மபுரம் பொலிஸாரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டு குண்டை வெடிக்க வைக்கும் பணியில் கிளிநொச்சி மாவட்ட விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த இரண்டு குண்டுகளும் பழையவை எனவும் இவற்றை இனந்தெரியாத நபர்கள் குறித்த இடத்தில் வைத்திருக்கலாம் என படைத்தரப்பு சந்தேகிக்கின்றது
குறித்த இடத்திற்கு ஊடகவியலாளர் செல்வதற்கோ புகைப்படம், ,காணொளி எடுப்பதற்கோ படையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்