ஒவ்வொரு வியாபாரியும் தமது வியாபாரத்தை இஸ்லாமிய வரையரைக்குள் காப்புறுதி செய்து கொள்ளல்.
இருக்கின்ற கையிருப்புகளை (Stocks) இயன்றளவு குறைத்தல் அல்லது வெவ்வேறு இடங்களில் பிரித்து வைத்தல்.
இயன்றளவு CCTV Camara க்களை பொருத்திக் கொள்ளல்.
வியாபார பெயர் பொறித்த Bag களை வாடிக்கயைாளர் (Custemers) களுக்கு எதிர் வரும் சில காலங்களுக்கு வழங்காது இருத்தல்.
குறைந்துள்ள வாடிக்கையாளர்களின் வருகையை அதிகரிக்க விலைக் கலிவு (Discount), மழிவு விற்பனை (Sale) போன்ற முறைகளை கையாளுதல்.
வருகின்ற வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவையை வழங்குதல்.
வழமையை விட மேலதிக சேவையை வழங்குதல் மற்றும் கனிவுடன் நடந்து கொள்ளல்.
எந்தவொரு வாடிக்கையாளரும் கடையிலிருந்து திருப்தி இன்றி செல்லாது இருக்க வழி செய்தல்.
வாடிக்கையாளர்களின் முன் அவர்களது மொழி தவிர்ந்த ஏனைய மொழிகளை பயன்படுத்துவதை தவிர்ந்து கொள்ளல்.
நம்பிக்கை, விசுவாசம் ஆகிய நல்ல பண்புகளை வெளிப்படுத்தல்.
எம்முடன் இருக்கும் ஊழியர்களை சிறப்பாக கவனித்தல். (விஷேடமாக மாற்று மத ஊழியர்களை)
கடைகளிலே அரபு எழுத்தனி, இஸ்லாமி அடையாளங்களை முடியமான வரை குறைத்துக் கொள்ளல்.
பொருட்கள் உட்திரும்பல் (return) பண்ணப்படும் சந்தர்பங்களில் நிலைமையை சரியான முறையில் கையாழுதல்.
உங்கள் வியாபாரத்தின் நிலையை, குறைகளை வெளிப்படுத்தாது இருத்தல். குறிப்பாக வியாபாரம் குறைவு, வியாபாரம் இல்லை என்பதற்கு பதிலாக திருப்தியாக வியாபாரம் நடப்பதை வெளிப்படுத்தல்.
நியாயமான அளவு நன்கொடைகளை தனி நபர் மற்றும் பொது நிறுவனங்களுக்கு வழங்குதல்.
வியாபாரிகளிடையே போட்டி, பொறாமை போன்ற தன்மைகளை விட்டு விட்டு ஒத்துழைப்புடன் வியாபாரம் செய்தல்.
வியாபார சங்கங்களில் உறுப்புரிமை(Membership) பெற்றுக் கொள்ளல் மற்றும் புதிய வியாபார சங்கங்களை உறுவாக்கள்.
வியாபாரிகளே அந்நிய மக்களுடன் தொடர்பு கொள்கின்றனர். ஆகவே நாட்டு நடப்புகள் பற்றி சரியான தெளிவுடன் நடந்து கொள்வதுடன் அவர்களின் கேள்விகளுக்கு அறிவு பூர்வமான பதில்களை வழங்குதல். மேலும் இவ்வாறான விடயங்களை ஏனைய வியாபரிகளுக்கும் எத்தி வைப்போமாக...