கிரேண்பாஸ் - வெஹெரகொடல்லே – கம்பித்தொட்டுவ பகுதியில் இரு குழுவினர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு குழுக்களுக்கு இடையில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் 46 வயதுடைய ஒருகொடபுர பகுதியை சேர்ந்த சுகத் இந்தரஜித் என்பவரே உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டி ஒன்றை விற்பனை செய்யும்போது ஏற்பட்ட முறுகல் நிலையே மோதலாக மாறி உள்ளதுடன், பிரதான சந்தேக நபரான டேனி கிளாஸ் என்பவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.