நீர்கொழும்பு, பிரதேசத்தில் நேற்று (05) இரவு இடம்பெற்ற பதற்ற நிலை தொடர்பாக ஆராய்வதற்காக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன் போது சமயத்தலைவர்கள் கலந்துகொண்டு சுமூக நிலை தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
இவருக்கு அரசாங்கத்தினால் கடந்த ஞாயிறு தாக்குதலின் பின் அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.